0
 கரப்பான் பூச்சிகளை வைத்து ஜப்பான் பல்கலைகழக மாணவர்கள் புதுவித சென்சார்களை உருவாக்கியுள்ளனர். கரப்பான் பூச்சிக்கு இரு மீசைகள் இருக்கும், அதாவது இவைகளை உணர் உறுப்புகள்(Antennae) என்று அழைக்கின்றனர். இதன் மூலம் முன்புறத்தில் ஏதேனும் தடை உள்ளதாக என அறிந்து கொள்ளும். இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள்(cerciseithycom) உள்ளன, பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும். இதனை கொண்டு ஜப்பானின் ஒசாகா பல்கலைகழகம் புதுவித சென்சார்களை உருவாக்கியுள்ளது.


இந்த சென்சார்களின் மூலம் மிக எளிதாக தகவல்களை பரிமாறி கொள்ள முடியும். கரப்பான் பூச்சிகளின் முதுகில் சென்சாரும் அதன் கூட 20mm x 15mm அளவுக்கு ஒரு ஃப்யூள் செல்லும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஃப்யூள் செல் வேலை செய்ய, கரப்பான் பூச்சியின் உடலில் ட்ரஹலோஸ்(trehalose) என்னும் திரவம் மற்றும் ஒரு சிறிய ஊசியை செலுத்துவார்கள்.

இந்த திரகம் உள்ளே எலக்ட்ரோட்ஸை உருவாக்கும், அதன் மூலம் குளுகோஸ் கிடைக்கும். இந்த எலக்ட்ரோட்ஸ் மூலம் ஊசி அனோட் /காத்தோடாக மாறி நிரந்திர மின்சாரம் கிடைக்கும், இது சென்சாரின் உபயோகத்திற்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இதற்கு முன்பு சோதனை செய்து பார்த்த போது, ஒவ்வொரு கரப்பான் பூச்சியும் 50.2μW மின்சாரத்தை தந்ததாம்.

எப்படியோ, கரப்பான் பூச்சியில இருந்து கரண்ட கண்டுபிடிச்சுடாங்க!...

கருத்துரையிடுக Disqus

 
Top