0
 


தேவையானவை:

தினை மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), கடுகு-சிறிதளவு, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி– சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுந்து – தலா கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும். கழுவி, நன்கு அரைத்து, தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அதை அடை மாவில் கொட்டிக் கலக்கவும். தேங்காய் துருவல். உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.

கருத்துரையிடுக Disqus

 
Top