எறும்புகள் பெரோமோன் என்ற வேதிப்பொருளைச் சுரக்கின்றன. இந்த வேதிப்பொருளைக் கொண்டு தேய்த்து வரைந்த கோட்டில் மட்டுமே எறும்புகள் செல்வதால் தான் அவை வரிசையாகச் செல்கின்றன.
சமூகமாகக் கூடி வாழும் தேனீக்களுக்கும், எறும்புகளுக்கும் வாசனைகளை அறிந்துகொள்வதற்கான திறமை மிகவும் அதிகம். ஒரே கூட்டின் உறுப்பினர்களான எறும்புகள், ஒன்றை ஒன்று வாசனையை வைத்துத்தான் அடையாளம் காண்கின்றன. சரியான வாசனை இல்லாத எறும்பை மற்ற எறும்புகள் தங்கள் வசிப்பிடத்தில் அனுமதிப்பதில்லை. வாசனையை இனங்காணும் இந்த அறிவு, அவற்றிற்கு உணவு தேடுவதற்காகத்தான் பெரிதும் உதவுகின்றன.
கருத்துரையிடுக Facebook Disqus