0

கோமாரி நோய்

கோமாரி நோய் மாடு, ஆடு, பன்றி முதலிய கால்நடைகளைத் தாக்கி மிக அதிக அளவிலான பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் கொடிய தொற்று நோயாகும். நம் நாட்டில் இந்நோய் ஏற்படுவதால் கால்நடை உபபொருட்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் பெருத்த இழப்பு ஏற்படுகிறது. மேலும் கால்நடை உரிமையாளருக்கு கால்நடைகளின் நிரந்தர பயன்பாடான பால் உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால் அதிக நட்டத்தினை ஏற்படுத்துகிறது.
கோமாரி நோயின் அறிகுறிகள் என்ன?


  • மிக அதிக காய்ச்சல்
  • சோர்ந்து காணப்படுதல்
  • பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாய், கால் குளம்புகளின் இடைவெளி மற்றும் பால் மடியில் கொப்புளங்கள் தோன்றுதல்
  • பாதிக்கப்பட்ட கால்நடைகள் நாக்கினை நீட்டியபடி வாயில் நுரையுடன் கூடிய எச்சில் ஒழுக்குதல்
  • கால் குளம்புகளில் புண்கள் இருப்பதால் கால் நொண்டி நடத்தல்
  • சமீப காலங்களில் இந்நோயானது பாலூட்டும் இளங்கன்றுகளின் இதயத்தினை தாக்கி அதிக இறப்பினை ஏற்படுத்துகிறதுநோய் சிகிச்சை

    • ஒரு சதவிகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கொண்டு நோயுற்ற கால்நடைகளின் வாய் மற்றும் கால் புண்களை கழுவவேண்டும்
    • வாய் புண் மீது போரிக் அமிலம் கிளிசரின் களிம்பினையும், கால் புண்களின் மீது ஆன்டிசெப்டிக் களிம்பினை தடவ வேண்டும்
      நோய் தடுப்பு முறைகள்
  • நோய் பாதிப்புக்குள்ளாகும் கால்நடைகளை நோய் தாக்கியுள்ள பகுதிக்கு ஓட்ட செல்லக்கூடாது
  • நோய் தாக்கியுள்ள பகுதிகளிலிருந்து கால்நடைகளை வாங்கக்கூடாது
  • புதிதாக கால்நடைகளை வாங்கும் போது அவற்றினை 21 நாட்களுக்கு மற்ற கால்நடைகளிலிருந்து தனியே கட்டி பராமரிக்க வேண்டும்

கருத்துரையிடுக Disqus

 
Top