இந்த சமூகத்தை வாழவைப்பது தொழில்கள்தான் . 99% மக்கள் வேலை செய்பவர்களாகவும் 1% க்கும் குறைவான பேர் வேலை கொடுப்பவர்களாகவும் , சுயத்தொழில் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். தொழிலதிபர்கள் போற்றப்படவேண்டியவர்கள். அவர்கள் சாதாரண மனிதரைப்போல் இல்லாமல் எல்லவிதமான பிரச்சினைகளையும் எதிர்கொண்டு அதற்கு தீர்வளிக்கும் தீர்க்க சிந்தனை உடையவர்கள்.
இன்று இளைஞர்கள் நம் தொழிலதிபர்களை படிக்கவேண்டும், அவர்களிடம் உள்ள சிறப்பு குணங்களை,அவர்கள் எவ்வாறு ஒரு சராசரி மனிதனில் இருந்து வேறுபடுகிறார்கள் என்றும் அறிந்துகொள்ளவேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொழில் சிந்தனை உடையவர்களாக, சொந்தக் காலில் நிற்பவர்களாக, பலருக்கு வேலைவாய்ப்பும், வளர்ச்சியும் அளிப்பவர்களாக உருவாக்கவேண்டும். அதற்கு உதவும் வகையில் இணையத்தில் உள்ள தமிழ் தொழிலதிபர்களின் வெற்றியின் ரகசியங்களை அறிய, ஒவ்வொரு சாதனையாளரும் அவரவர்கள் படித்த நூல்கள், வெற்றி, தோல்விகள், அதில் இருந்து மீள அவர்கள் மேற்கொண்ட அணுகுமுறைகள் போன்றவைககளை இங்கே குறிப்பிடுகிறார்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus