வயிற்றோட்டம் (டையரியா) என்றால் என்ன?
வயிற்றோட்டம் என்பது அடிக்கடி, தளர்வான அல்லது நீர்த்தன்மையான மலம் கழிப்பதைக் குறிக்கும். இது வழக்கமாக குடலின் உட்பரப்பைத் தொற்றிக்கொள்ளும் வைரசினால் ஏற்படுத்தப்படுகின்றது. ரோட்ட வைரஸ், பிள்ளைகளில் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும் வைரசுகளுக்கு ஒரு உதாரணமாகும்.
சில வேளைகளில் பக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகளால் அல்லது வயிற்றோட்டத்தை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை உண்பதால் மற்றும் பருகுவதால் அல்லது உணவிலுள்ள ஏதோவொன்றிற்கு பிரதிபலிப்பதால் டையரியா ஏற்படலாம். சில வேளைகளில் அன்டிபையோடிக்ஸ் எடுக்கப்பட்ட பின்பு இது ஏற்படலாம். மேலதிகத் தகவலுக்கு, “அன்டிபையோடிக்-தொடர்புடைய டையரியா”வைப் பார்க்கவும். மிக அரிதாக, குடல்களிலிருந்து உணவு உறிஞ்சப்படுவதைப் பாதிக்கும் உடல் நிலையொன்றால் இது ஏற்படுத்தப்படலாம்.
இந்தத் தகவல், நோய்த் தொற்றால் ஏற்படுத்தப்பட்ட வயிற்றோட்டத்தையே மையமாகக் கொண்டிருக்கும்.
கடுமையான வயிற்றோட்டத்துக்கான அடையாளங்களும் அறிகுறிகளும்
வயிற்றோட்டம் உடல் நீர் வறட்சியை ஏற்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் வயிற்றோட்டம் ஆபத்தானதாக இருக்கலாம். குறிப்பாக இளம் குழந்தைகளுக்கு உடல் நீர் வறட்சி விரைவாக ஏற்பட்டுவிடும். உடல் நீர் வறட்சிக்கான அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:
வயிற்றோட்டம் 1 வாரம் வரை நீடிக்கலாம்
வயிற்றோட்டம் வழக்கமாக 1 நாளிலிருந்து 1 வாரம்வரை நீடிக்கும். இந்தக் காலப் பகுதியில் வயிற்றோட்டத்தால் இழந்த நீரை மாற்றீடு செய்வதற்கு உங்கள் பிள்ளை போதிய அளவு நீரைப் பருகவேண்டும். அவனது சக்தியையும் ஊட்டச்சத்தையும் பேணுவதற்கு போதிய அளவு வழக்கமான உணவுகளையும் உண்ணவும் குடிக்கவும் வேண்டும்.
உங்கள் பிள்ளையை வீட்டில் எவ்வாறு பராமரிப்பது மற்றும் வீட்டில் வயிற்றோட்டத்தை எவ்வாறு தவிர்ப்பது
தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளில் வயிற்றோட்டம்
சில வேளைகளில் தாய்ப்பாலுட்டப்படும் குழந்தை வயிற்றோட்டத்தைக் கொண்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்வது கடினம். பல தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் முதல் சில மாதங்களுக்கு ஒவ்வொரு முறை பாலருந்தியபின்னும் மிகத் தளர்ந்த மலத்தையே கழிப்பார்கள். எத்தனை தடவை பிள்ளை மலம் கழிக்கின்றது என்பதில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் அல்லது மலத்தில் சீதம் அல்லது இரத்தம் அல்லது திடீரென மோசமான மணமுள்ளதாக இருக்கிறது என்றால் பிள்ளைக்கு வயிற்றோட்டமிருக்கிறது என்று அர்த்தமாகலாம்
தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைக்கு வயிற்றோட்டமிருக்கும்போது, சிகிச்சை மிகவும் எளியது. தொடர்ந்து தாய்ப்பாலூட்டுங்கள், ஆனால் மேலும் அடிக்கடி கொடுங்கள். உங்கள் குழந்தைக்கு டையரியா இருக்கும்போது தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம்.
வயிற்றோட்டம் மிகக் கடுமையாக இருந்தால் அல்லது உடலில் நீர்வறட்சிக்கான அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், பெடியலைட் போன்ற ஒரு வாய்வழி உடல் நீரேற்றக் கரைசலை முலைப்பாலூட்டிய பின் அல்லது முலைப்பாலூட்டல்களுக்கு இடையில் வழங்கலாம். ஆனால் இந்த வாய்வழி உடல் நீரேற்றக் கரைசல் தாய்ப்பாலின் இடத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது.
உங்கள் குழந்தை முலையிலிருந்து சரியாகப் பால் குடிக்கவில்லையென்றால், சொட்டு சொட்டாக விட பயன்படுத்தும் கருவியைக்கொண்டு கறக்கப்பட்ட தாய்ப்பாலை அல்லது வாய்வழி உடல் நீரேற்றக் கரைசலைக் கொடுங்கள். ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு ஒரு தடவை 1 தேக்கரண்டி (5 மிலீ) கறக்கப்பட்ட முலைப்பால் அல்லது வாய்வழி உடல் நீரேற்றக் கரைசல் என்ற அளவில் ஆரம்பித்து பின் பிள்ளை சகித்துக்கொள்வதன்படி அளவை அதிகரிக்கலாம். 4 மணி நேரங்களுக்கு வாந்தியெடுக்காமல் இருந்தால், மீண்டும் முலையிலிருந்து தாய்ப்பாலை ஊட்ட முயற்சி செய்யுங்கள்.
ஏதாவது ஒரு காரணத்திற்காக நீங்கள் முலைப்பாலூட்டுவதை நிறுத்த வேண்டியிருந்தால், மீண்டும் முலைப்பாலூட்டத் தொடங்கும்வரை உங்கள் பால் சுரக்கும் அளவைப் பேணுவதற்காக, உங்கள் முலைப்பாலை பம்ப் செய்வதை (கறந்து வைப்பதை) நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவருடன் கலந்து பேசாமல், ஜூஸ், சோற்றுத் தண்ணி, தேனீர் அல்லது வீட்டில் செய்த கரைசல்கள் போன்ற திரவங்களை கொடுக்கவேண்டாம்.
உங்கள் குழந்தை திட உணவை உண்ணுவதாக இருந்தால், அவனுக்கு வயிற்றோட்டம் இருந்தாலும்கூட அவனுடைய வழக்கமான உணவை நீங்கள் அவனுக்குக்கொடுக்கலாம். அவன் வாந்தியெடுப்பானேயானால் மேலே விவரிக்கப் பட்டுள்ளபடி முலைப்பாலை அல்லது வாய்வழி உடல் நீரேற்றக் கரைசலைக் கொடுங்கள். 4 மணி நேரங்களுக்கு வாந்தியெடுக்காமல் இருந்தால், குறைந்த அளவு சீனிக கொண்ட, சீரியல் அல்லது மசிக்கப்பட்ட வாழைப்பழம் போன்ற இலகுவாக சமிபாடடையக்கூடிய எளிய உணவுகளைக் கொடுக்கலாம். வழக்கமாகக் குழந்தைகள் வாந்தியெடுத்து 1 நாளுக்குள் மீண்டும தங்களுடைய வழக்கமான உணவை உண்ண ஆரம்பிக்கலாம்.
ஃபோர்மூலா ஊட்டப்படும் குழந்தைகளில் வயிற்றோட்டம்
ஃபோர்மூலா கொடுக்கப்படும் குழந்தைகள் வயிற்றோட்டத்தின் போது தொடர்ந்து அவர்களின் வழக்கமான ஃபோர்மூலாவை உட்கொள்ளவேண்டும். ஃபோர்மூலாவை ஐதாக்க வேண்டாம்.
உங்கள் குழந்தை வாந்தியெடுக்கவில்லையென்றால், குழந்தைக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு கொடுப்பதோடு, வழக்கத்தைவிட அதிக தடவைகள் உணவை வழங்குங்கள்.
உங்கள் குழந்தை ஃபோர்மூலாவை வாந்தியெடுக்கின்றதென்றால், வாய்வழி உடல் நீரேற்றக் கரைசலொன்றை உபயோகிக்கவும் (பெடியலைட் அல்லது பீடியாற்ரிக் எலெக்ட்ரோலைட் போன்றவை). ஒவ்வொரு 2 தொடங்கி 3 நிமிடங்களுக்கு 1 தேக்கரண்டி (5 மிலீ) வாய் வழி உடல் நீரேற்றக்கரைசலைக் கொடுக்கத்தொடங்கி, பிள்ளை வாந்தியெடுக்காமல் கூடுதலான அளவு கரைசலை சகித்துக்கொள்ளும்வரையில் இவ்வாறு செய்யவேண்டும். குழந்தை விழித்திருக்கும் ஒவ்வொரு மணிநேரத்துக்கும், குழந்தையின் எடையில் ஒவ்வொரு இராத்தலுக்கும் (ஒரு கிலோவுக்கு 20 மிலீ) குறைந்த பட்சம் 2 இலிருந்து 3 தேக்கரண்டி கொடுக்க முயற்சிக்கவும். குழந்தை வாந்தியெடுக்காமல் இரண்டு மணிநேரங்கள் கழிந்துவிட்டால் ஃபோர்மூலாவுக்குத் திரும்பவும் செல்லவும். அடிக்கடி சிறிய அளவுகளில் இதைக் கொடுக்க நிச்சயமாய் இருக்கவும்.
தனது வழக்கமான ஃபோர்மூலாவை உங்கள் குழந்தையால் ஒரு நாளைக்கு மேல் சகித்துக்கொள்ள முடியாமல் போகும்போது உங்கள் மருத்துவருடன் பேசுங்கள். உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசாமல் ஜூஸ், சோற்றுத் தண்ணீர், விளையாட்டுப் பானங்கள், தேனீர் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட கரைசல்கள் போன்ற வேறு வகை திரவங்களைக் கொடுக்க வேண்டாம்.
திட உணவு உண்ணும் குழந்தைகளில் வயிற்றோட்டம்.
உங்கள் குழந்தை திட உணவை உண்பதாயிருந்தால், வயிற்றோட்டம் இருக்கும்போதுகூட அவளுக்கு வழமையான உணவுகளை வழங்குங்கள். குழந்தைக்கு வேண்டிய சக்தியையும் ஊட்டச்சத்தையும் வழங்க இது உதவுகின்றது. குழந்தை வாந்தியெடுத்தால், மேலே குறிப்பிட்ட விதமாக ஃபோர்மூலா அல்லது வாய் வழி உடல் நீரேற்றக் கரைசலைக் கொடுக்கவும். குறைந்தது 4 மணி நேரங்களுக்கு வாந்தியெடுத்தல் நின்றுவிட்டால், சீரியல் அல்லது மசிக்கப்பட்ட வாழைப்பழம் போன்ற சீனி குறைவாக உள்ள மற்றும் இலகுவில் சமிக்கக்கூடிய எளிய உணவுகளைக் கொடுங்கள். பொதுவாக குழந்தைகள் வாந்தியெடுத்த 1 நாளுக்குள் தங்களுடைய வழக்கமான உணவுகளுக்குத் திரும்பலாம்.
நடைகுழந்தைகளில் வயிற்றோட்டம்
வயிற்றோட்டம் கடுமையற்றதாக இருந்தால் எந்த மாற்றமும் செய்யப்படவேண்டியதில்லை. ஆனாலும் வயிற்றோட்டத்தைக் கடுமையாக்கக்கூடிய சீனிகளைக் கொண்டிருக்கின்ற ஜூஸ், ஜிஞ்ஜரேல் மற்றும் வேறு மென்பானங்களைக் குறைப்பது நல்லது. கோலாக்கள் போன்ற கஃபேனைக் கொண்டிருக்கும் பானங்களும்கூட வயிற்றோட்டத்தை மோசமடையச் செய்யலாம்.
வயிற்றோட்டம் அடிக்கடி செல்வதாயும் நீர்த்தன்மை கொண்டதாயும் இருந்தால் உங்கள் பிள்ளை அதிக திரவங்களை உட்கொள்ளவேண்டும். உங்கள் பிள்ளை உடல் நீர் வறட்சியின் அடையாளங்களைக் காட்டினால், உடல் நீரேற்றக் கரைசலே (பெடியலைட் அல்லது பீடியாற்ரிக் எலெக்ட்ரோலைட் போன்றவை) கொடுப்பதற்கு மிகச் சிறந்த திரவமாகும். வாய்வழி உடல் நீரேற்றக் கரைசல்கள் உப்புத் தன்மை கொண்டதென்பதால் அநேகமான பிள்ளைகள் அதை விரும்புவதில்லை, ஆயினும் அது குளிரான நிலையில் வழங்கப்பட்டால் பிள்ளைகள் அதை விரும்பக்கூடும். பலசரக்குக் கடையில் அல்லது மருந்துக்கடையில் கிடைக்கும் வாய் வழி உடல் நீரேற்றப் பொப்சிக்கிள்களை சில பிள்ளைகல் விரும்புகிறார்கள். வாய்வழி உடல் நீரேற்றக் கரைசலுக்கு சில மாற்று வழிகள்: விற்பனைக்குக் கிடைக்கும் உடல் நீரேற்றக் கரைசலில் 1:2 விகிதத்தில் (ஒரு பங்கு ஜூஸுக்கு 2 பங்கு உடல் நீரேற்றக் கரைசல்) ஜூஸைக் கலந்து சுவையூட்டுவதாகும், ஆனால் இது மிகச் சிறந்த வழியல்ல, அல்லது கேட்டரேட் போன்ற ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரோலைட் பானத்தை பிள்ளைக்குக் கொடுப்பதாகும். வாய்வழி உடல் நீரேற்றக் கரைசல் ஒரு தெரிவல்ல என்றால் மட்டுமே இது போன்ற கரைசல்களைக் கொடுக்கவும்.
உங்கள் பிள்ளை வாந்தியெடுத்தால், திட உணவைத் தவிர்த்துவிட்டு அவளுக்கு நிறைய திரவங்கள் கொடுப்பதில் குறியாக இருங்கள். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 1 அல்லது 2 தேக்கரண்டி திரவத்தைக் கொடுக்க ஆரம்பித்து, பிள்ளை சகித்துக்கொள்வதன்படி அதை அதிகரியுங்கள். 4 மணிநேரங்களுக்கும் அதிகமாக அவள் வாந்தியெடுக்கவில்லையென்றால் மீண்டும் திட உணவைக் கொடுக்க ஆரம்பியுங்கள்.
வாந்தி அல்லது வயிற்றோட்டமுள்ள பிள்ளைகளில் பலர் எளிய மாத்தன்மையான உணவை மிக இலகுவாக சமிபாடடையச் செய்வார்கள். அத்தகைய உணவுகள் சீரியல்கள், பான், கிரக்கர்கள், சோறு, நூடில்ஸ், உருளைக் கிழங்கு மற்றும் வாழைப் பழம் போன்றவற்றை உட்படுத்தும். வயிற்றோட்டம் இருக்கும்போது உங்கள் பிள்ளை தொடர்ந்து திட உணவை உட்கொள்ளவேண்டும். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவைப் பேணுவது அவள் நிவாரணமடைவதற்கான ஒரு முக்கிய படியாகும்.
3 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுமுள்ள பிள்ளைகளில் வயிற்றோட்டம்
வயிற்றோட்டம் கடுமையற்றதென்றால் எந்தவித மாற்றமும் செய்யப்பட வேண்டியதில்லை. ஆனாலும் வயிற்றோட்டத்தைக் கடுமையாக்கக்கூடிய சீனிகளைக் கொண்டிருக்கின்ற ஜூஸ், ஜிஞ்ஜரேல் மற்றும் வேறு மென்பானங்களைக் குறைப்பது நல்லது. கோலா மற்றும் ஜிஞ்ஜரேல் மற்றும் வேறு மென்பானங்களை உட்படுத்தும் வேறு அதிக இனிப்பூட்டபட்ட பானங்களைப் போன்ற கஃபேனைக் கொண்டிருக்கம் பானங்களும்கூட வயிற்றோட்டத்தை மோசமடையச் செய்யலாம்.
வயிற்றோட்டம் அடிக்கடி செல்வதாயும் நீர்த்தன்மை கொண்டதாயும் இருந்தால் உங்கள் பிள்ளை அதிக திரவங்களை உட்கொள்ளவேண்டும். 3 வயதுக்கு மேற்பட்ட அநேகமான பிள்ளைகளுக்கு வயிற்றோட்டத்தின்போது சாதாரண திரவங்கள் அல்லது ஸ்போர்ட்ஸ் பான்ங்கள் கொடுக்கப்படலாம். உங்கள் பிள்ளை உடல் நீர் வறட்சியின் அடையாளங்களைக் காட்டினால், உடல் நீரேற்றக் கரைசலே (பெடியலைட், என்ஃபலைட் அல்லது பீடியாற்ரிக் எலெக்ட்ரோலைட் போன்றவை) கொடுப்பதற்கு மிகச் சிறந்த திரவமாகும். வாய்வழி உடல் நீரேற்றக் கரைசல்கள் உப்புத் தன்மை கொண்டதென்பதால் அநேகமான பிள்ளைகள் அதை விரும்புவதில்லை, ஆயினும் அது குளிரான நிலையில் வழங்கப்பட்டால் பிள்ளைகள் அதை விரும்பக்கூடும். பலசரக்குக் கடையில் அல்லது மருந்துக்கடையில் கிடைக்கும் வாய் வழி உடல் நீரேற்றப் பொப்சிக்கிள்களை சில பிள்ளைகல் விரும்புகிறார்கள். வாய்வழி உடல் நீரேற்றக் கரைசலுக்கு சில மாற்று வழிகள்: விற்பனைக்குக் கிடைக்கும் உடல் நீரேற்றக் கரைசலில் 1:2 விகிதத்தில் (ஒரு பங்கு ஜூஸுக்கு 2 பங்கு உடல் நீரேற்றக் கரைசல்) ஜூஸைக் கலந்து சுவையூட்டுவதாகும், ஆனால் இது மிகச் சிறந்த வழியல்ல, அல்லது கேட்டரேட் போன்ற ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரோலைட் பானத்தை பிள்ளைக்குக் கொடுப்பதாகும்.

தொற்றுநோய் வயிற்றோட்டம் இலகுவில் பரவும்
வைரஸ் அல்லது வேறு கிருமித்தொற்றால் ஏற்படுத்தப்படும் வயிற்றோட்டங்கள் மிகவும் தொற்றும் தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு முறை கழிவறையைப் பயன்படுத்திய பின்னும், டையப்பர் மாற்றிய பின்னும் கைகளை சோப் மற்றும் நீர்கொண்டு நன்றாகக் கழுவுவதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
டையப்பர் அரிப்புக்கு சிகிச்சை
டையப்பர் கட்டப்படும் பகுதியில் உள்ள தோற்பகுதிக்கு வயிற்றோட்டம் மிகவும் உறுத்தலுள்ளதாக இருக்கலாம். தோல் மற்றும் வயிற்றோட்டத்திற்கு இடையில் தடுப்பை ஏற்படுத்தக்கூடிய கிறீம்கள் மற்றும் ஒயின்மன்டுகள் டையப்பர் அரிப்பின் கடுமையைக் குறைப்பதற்கு உதவலாம். சில உதாரணங்கள் பெற்ரோலியம் ஜெல்லி (வாஸ்லீன்) மற்றும் பெனாடென் மற்றும் இஹ்லெஸ் பேஸ்ற் போன்ற சிங்க் உள்ள கிறீம்கள் போன்றவற்றை உட்படுத்தும். வயிற்றோட்டத்தின் பின்னர் ஒவ்வொரு முறையும் உடனடியாக சருமத்தை சுத்தம் செய்து பின் மிகத் தடிப்பான படலமாக பாதுகாப்பளிக்கும் கிறீமைப் பூசவும்.
உங்கள் மருத்துவர் சொன்னாலேயன்றி வயிற்றோட்டத்துக்கு மருந்து கொடுக்க வேண்டாம்.
வைரஸால் ஏற்படுத்தப்பட்ட வயிற்றோட்டத்திற்கு பாதுகாப்பானதும் சிறந்ததுமான மருந்துகளாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. குடலில் வாழும் சாதாரண பக்டீரியாக்களுக்கு இடையூறு செய்வதன் மூலம், அன்டிபையோடிக்ஸ்கள் வயிற்றோட்டத்தை மோசமடையச் செய்யலாம்.
மருந்துக்குறிப்புள்ள மற்றும் மருந்துக்குறிப்பில்லாத வயிற்றோட்டத்திற்கான மருந்துகளில் பல பிரச்சினைகள் உள்ளன. சில மருந்துகள் அதிக தூக்கக்கலக்கத்தை ஏற்படுத்தலாம், வலியை மோசமடையச் செய்யலாம் அல்லது வேறு சிக்கல்களை உருவாக்கலாம். வேறு மருந்துகள் சில சந்தர்ப்பங்களில் குழந்தைக்குப் பாதுகாப்பற்றதாக இருக்கும் உட்பொருட்களைக் கொண்டிருக்கலாம்.
உங்கள் மருத்துவருடன் முதலில் கலந்தாலோசிக்காமல் உங்கள் பிள்ளைக்கு வயிற்றோட்ட மருந்துகளைக் கொடுக்காதீர்கள். பொதுவாக, வயிற்றோட்டத்திற்கு மிகச் சிறந்த மருந்து, நிறைந்த அளவு திரவங்களை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதன் மூலம் உடல் நீர் வறட்சியைத் தவிர்ப்பதாகும்.
மருத்துவ உதவியை எப்போது நாடுவது
பின்வருவனவற்றின்போது உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரைப் பாருங்கள்:
பின்வரும் நிலைமைகளின் போது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் பிள்ளையை எடுத்துச் செல்லுங்கள் அல்லது அவசியமேற்பட்டால் 108 ஐ அழையுங்கள்
முக்கிய குறிப்புகள்

- வாய் உலர்தல்
- அழும்போது குறைந்தளவு கண்ணீர்
- குளிவிழுந்த கண்கள்
- வழக்கமாக சிறுநீர் கழிக்கும் தடவைகளுக்கு குறைவாக சிறுநீர் கழித்தல்
- கடும் நிறம்கொண்ட சிறுநீர்
- ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தைகளில் தாழ்ந்த உச்சிக்குழி
- குறைந்த அளவு செயற்பாடுகள்

- கடுமையற்ற உடல் நீர்வறட்சியின் அறிகுறிகள் காணப்படுகிறது ஆனால் சிறிது திரவங்கள் பருக முடிகிறது
- 48 மணி நேரங்களுக்கும் அதிகமாக வாந்தியெடுக்கின்றது
- 3 மாதங்களுக்கும் குறைவான வயது
- காய்ச்சலிருக்கின்றது மற்றும் 3 மாதங்களுக்கும் அதிக வயது
- வயிற்றோட்டத்தில் சீதம் காணப்படுகின்றது
- 2 நாட்களுக்கும் அதிகமாக, கடுமையான வயிற்றோட்டமிருக்கின்றது (ஒரு நாளைக்கு 8 தடவைகளுக்கு மேல்)
- கடுமையற்ற வயிற்றோட்டம் 2 வாரங்களுக்கும் அதிகமாக இருக்கின்றது
பின்வரும் நிலைமைகளின் போது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் பிள்ளையை எடுத்துச் செல்லுங்கள் அல்லது அவசியமேற்பட்டால் 108 ஐ அழையுங்கள்
- உடல் நீர்வறட்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகின்றது ஆனால் திரவங்களைப் பருக முடியாமலிருகின்றது
- பச்சை அல்லது இரத்தமுள்ள வாந்தி அல்லது வயிற்றோட்டமிருக்கின்றது
- மலம் கழிப்பதால் குணமடையாத மற்றும் மோசமடைந்து வருகின்ற கடுமையான வயிற்று வலியிருக்கின்றது
- மிகச் சுகவீனமாக இருப்பதுபோல் காணப்படுகின்றது
- காய்ச்சல் மற்றும்/அல்லது தொடர்ச்சியான வயிற்றோட்டமிருக்கின்றது மற்றும் 3 மாதங்களுக்கும் குறைவான வயது
முக்கிய குறிப்புகள்
- அடிக்கடி, இழகிய அல்லது நீர்த்தன்மையான மலம் கழிப்பதை வயிற்றோட்டம் உட்படுத்தும்.
- உடல் நீர்வறட்சியை ஏற்படுத்துமென்பதால் தொடர்ச்சியான வயிற்றோட்டம் குழந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் ஆபத்தானதாகலாம்.
- உலர்ந்த வாய், குழிவிழுந்த கண்கள், அடிக்கடி சிறுநீர் கழைக்காதிருத்தல், குறைந்த செயற்பாடுகள் உடல் நீர்வறட்சியில் உட்படும் அறிகுறிகளாகும்.
- சாதாரண வயிற்றோட்டமானது வழக்கமாக 1 நாளுக்கும் 1 வாரத்திற்குமிடையில் வரை நீடிக்கும்.
- உங்கள் குழந்தைக்கும் இளம் பிள்ளைக்கும் தொடர்ந்து உணவூட்டுங்கள். சிறு குழந்தைகளுக்கும் வளர்ந்த பிள்ளைகளுக்குமான உணவு மற்றும் பானத் தேர்வுகள் வேறுபடும்.
- உங்கள் பிள்ளை பருக முடியாதிருந்தால், மலத்தில் இரத்தமிருந்தால், தொடர்ச்சியான வலியிருந்தால் அல்லது மிகவும் சுகவீனமுற்று காணப்பட்டால் ஒரு மருத்துவரைப் பாருங்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus