முதலில் உங்களையும் என்னையும் இணைக்க காரணமான,March 12, 1989 இல் உருவான WWW ஐ உருவாக்கிய, Tim-Berners Lee, ஐ நினைவில் இருத்தி,..............
Big Bang theory என்பது பற்றி உங்களுக்குத் தெரிந்ததே.இருப்பினும் ஒரு சிறிது சொல்வதென்றால்,இது அண்டம் உருவான முறை பற்றிய ஒரு கோட்பாடு அல்லது நிரூபிக்கப்படாத ஒரு உண்மை எனலாம். உலகம் 13.798 ± 0.037 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது என்கிறது, அந்தத் கோட்பாடு.ஒன்றுமே இல்லாத ஒரு சிறிய அடர்த்தியான தீப்பிழம்பு போன்றதும்,சில மில்லி மீட்டர் அளவுடைய பொருள்(dense) ஒன்று, யாராலும் விளக்கம் தர முடியாத ஒரு காரணத்தால்,பெரிதாக வெடித்து,(Big Bang) ,திடீரென விரிவடைய ஆரம்பித்து, அணுக்கள், அதைத் தொடர்ந்து அணுக்கள் மோதி நியூட்டோன்,ப்ரொடோன்,தொடர்ந்து உருவான வளிகள் குளிர்ச்சி அடைந்து, stars ,galaxies என உருவாகியது.அந்த Big Bang நிகழ்வு ஒரு சில வினாடிகளில்(10-34 seconds ) நடந்து,விரிவடைய ஆரம்பித்திருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். இன்றும் தொடர்ந்து விரிவடைந்து போகிறது என்றும் சொல்கிறார்கள்.இந்த Big Bang போன்ற எதிரொலி ஒன்றை நடத்தி ஆய்வு செய்ய,(gravitational echo of the big bang ), Harvard-Smithsonian Center for Astrophysics, Monday March 17th at 4pm GMT, அன்று முடிவு செய்துள்ளது.
அந்த ஒன்று என்ன, எப்படி உருவானது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாத இரகசியம்.இந்தக் கோட்பாடு பலரால் பலவிதமாக,மதங்களால் வேறு விதமாக கூறப்பட்டு வருகிறது.
சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து,எங்கிருந்து என்று இதுவரை தெரியாத,வரும் அண்டக்கதிர்கள்(Cosmic rays) வளிமண்டலத்தில்( atmosphere )உள்ள அணுக்களை தாக்குவதால் ஏற்படுத்தும் இரண்டாம் அண்டக்கதிர், ஆற்றல் பெற்ற நியூட்றோங்களாக(energetic neutron )மாற்றமடைந்து nitrogen atoms களை தாக்குகிறது.இப்படி நியூட்றோங்கள், nitrogen-14 (seven protons, seven neutrons) ஐ தாக்கும் போது, அதன் அணுக்கள் carbon-14 அணுவாகவும்(six protons, eight neutrons) ஆகவும்,hydrogen அணுவாகவும் (one proton, zero neutrons)மாறுகிறது. இந்தCarbon-14 அணு radioactive கொண்டதாகவும்,அதன் அரை வாழ் நாள் 5,700 வருடங்களாகவும் இருக்கும்.
இந்த அரை வருடம் என்பது,ஒவ்வொரு 5700 வருடங்களுக்கு ஒருமுறை,C14 தனது வாழ் நாளை(decay) அரைவாசியாக இழக்கிறது என்று பொருளாகும்.
அண்டக்கதிர்களால் உருவாகும் carbon-14 அணுக்கள், உயிர்வளியுடன் (Oxygen) கலந்து கரிவளியாக(carbon dioxide) மாறுவதை மரங்கள் உணவுத் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றன.
உயிரினங்கள் அழியும்(decay) போது,அதில் இருக்கும் C14 ஐ வைத்து அந்தப் பொருள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்று கண்டறிகிறார்கள்.இது Carbon Dating எனச் சொல்லப்படுகிறது. இந்த முறையின்படி,60.000 ஆண்டுகள் வரை கணக்கிட முடியும். அதற்கு மேற்பட்ட காலத்தை எப்படிக் கண்டறிகிறார்கள் என்றால் உயிரினங்களின் உடலில் உள்ள மற்றைய, Potassium-40 (1.3 பில்லியன் ஆண்டுகள்-அரையாண்டு), Uranium -235 (704 மில்லியன் ஆண்டுகள்0அரையாண்டு), Uranium -238 (4.5 பில்லியன்), Thorium-232 (14 பில்லியன் ஆண்டுகள்) Rubidium-87 (49 பில்லியன் ஆண்டுகள்) போன்ற radioactive element களை வைத்துக் கண்டறிய முடியும்.
கருத்துரையிடுக Facebook Disqus