0
நீங்க பள்ளியிலும் கல்லூரியிலும் உங்கள் நண்பர்களுக்காக எத்தனை முறை குரலை மாற்றி வருகை பதிவேடு கொடுத்து இருப்பீங்க? அதுக்கு பேர்தான் ப்ராக்ஸி (அட்டெண்டன்ஸ்). அதாவது ஒருவர் குரலில் மற்றவர்களுக்கு வருகை பதிவு செய்வது போல இங்கே ஒருவருடைய ஐபியை மற்றவர் இந்த ப்ராக்ஸி முறையில் பயன்படுத்தலாம்.

பொதுவாக இணைய சேவையை வழங்குபர்கள் (ISP - Internet Service Provider) தங்களுக்கு என தனி பிராக்ஸி சர்வரை வைத்து இருப்பார்கள். நீங்கள் கூகிள் தளம் செல்ல google.com என டைப் செய்து எண்டர் பொத்தானை தட்டுவீர்கள், அதன் பிறகு என்ன என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் வேண்டுகோள் இந்த ப்ராக்ஸி சர்வருக்குத் தான் முதலில் செல்லும். அதர்க்காண ஐபியை இனம்கானும் பின்னர் இந்த ப்ராக்ஸி சர்வர் நம்முடைய வேண்டுகோளுக்கான தகவல் எந்த வெப் சர்வரில் இருக்கிறதோ அதனுடன் .தொடர்பு கொண்டு நமக்கு தேவையான தகவல்களைப் பெற்றுத் தருகின்றது.    

பெரும்பாலும் அனைத்து தளத்துக்கும் பொதுவாக ஒரு ஐபி முகவரி உண்டு. உதாரணம் google.comக்கு 74.125.236.200 இதுதான் ஐபி. இதை காப்பி செய்து பிரௌசரில் பேஸ்ட் செய்து எண்டர் அடித்து பாருங்கள். நேராக கூகிள் செல்லும்.


அடுத்து இந்த ப்ராக்ஸி சர்வர் மூலம் ஐபி மாஸ்கிங்க் செய்வது பற்றி பார்க்கலாம்.

நீங்கள் இந்தியாவில் இருக்கீங்க, ஆனால் உங்கள் நண்பரிடம் அமரிக்காவில் இருப்பதாக காட்டிகொள்ள வேண்டும் இது சாத்தியமாயென்றால், கண்டிப்பா சாத்தியம்தான். இதற்காகவே தனியாக நிறைய டூல்ஸ் இருக்கு. நமது உலாவிகளில் நீட்சியாகவும் இணைத்துக்கொள்ளலாம்.



அதை கணினியில் நிறுவியவுடன் நீங்கள் எந்த நாட்டில் இருக்கீங்க என காட்டும், பின்னர் Choose IP Country தேர்ந்தெடுத்து அதில் அமெரிக்கவில் எந்த மாகாணம் என தேர்வு செய்தால் உங்கள் ஐ‌எஸ்‌பி ஐபி மாறிவிடும். ஆனால் இது நண்பர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். நெட்வொர்க் நிறுவனங்களை ஏமாற்றமுடியாது.

நீங்க என்ன செய்றீங்க, யாருக்கு மின்னஞ்சல் செய்றீங்க, உறுப்பினர் ஐடி, கடவுச்சொல் முதற்கொண்டு ப்ராக்ஸி சர்வரில் பதிவாகிவிடும். அதனால் இந்த முறை பெரிதும் பாதுகாப்பான முறை அல்ல.


கருத்துரையிடுக Disqus

 
Top