0
WiFI என்பதை wireless fidelity என பலரும் சொல்லி வந்தாலும்,அது உண்மையல்ல. WiFi க்குப் பொருள் கிடையாது.அது ஒரு ஒரு பதிவு செய்யப்பட்ட, IEEE 802.11x. என்பதன் வர்த்தகக் குறியிடாகும்.Institute of Electrical and Electronics Engineers (IEEE -Electrical and Electronics Engineers- 802.11 ) இவர்களே இந்த முறையை உருவாக்கினார்கள்.

WiFi என்பது sender - receiver களுக்கிடையில் radio frequency (RF) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, செயல்படும் முறையாகும்.. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள சிறிய antenna வில் ஏற்படும், மின் காந்த அலைகளை (electromagnetic ) வைத்து, வானொலி அலைப்பரவல் ( radio wave propagation) ஊடாக தொடர்புகள்(communication) வெளியே பரப்பப்பட்டு, இரண்டாவது அல்லது பல இடங்களை சென்று (access point -AP -WAP) அடைகிறது.இந்த access point இல் கிடைக்கும், broadcast wireless signal களை கணினிகள் கண்டறிந்து ஏற்றுக் கொள்ளுகிறது. இதற்கு கணினி,devices என்பவை wireless network adapters களாக செயல்படுகிறது.

அதாவது கம்பியில்லாமல் வானொலி அலைகள் மூலம் இணையத் தொடர்பை, நெட்வேக் தொடர்புகளை, உயர் வேகம் கொண்ட வானொலி அலைகள் மூலம் இணைக்கும் முறை WiFi எனப்படுகிறது.ஆனாலும் WiFi எனப் பொதுவாக சொல்லப்படும் தொடர்புகளை, wireless LAN (WLAN) மூலம் ஏற்படுத்தினாலும்,802.11 என்பதே சரியானதாகும்.

இதை ரௌடர் உள்ளவர்கள், CMD – ipconfig -சென்று அங்குள்ள default Gateway இலக்கத்தை(198.168.178. ) பிரவுசரில் கொடுத்தால், அங்கே WiFi இல் செல்வோர் விபரங்களைக் காணலாம்.இல்லையேல்,ipconfig/all அல்லது Who's On My Wifi ,Wireless Network Watcher போன்ற மென்பொருட்களை இணைத்தும் கண்டறியலாம்.

இந்த WiFi இல்லாது கணினியில் உள்ள ad-hoc-mode மூலம் P2P முறையில் ஏற்படுத்தவும் முடியும். செயல்படும் தூரம் 30 மீ. இல் இருந்து, வானொலி அலைகளைப் பொறுத்து வேறுபடும். அது போல் ஆகக் கூடிய பரிமாற்றம் 802.11g இணைப்பில் 54 Mbps ஆக இருக்க முடியும்.இந்த WiFi முறை தனியாக கணினி மட்டுமல்லாது, Bluetooth, smartphone, Keyboard,Mouse,சில வீட்டு தொலைபேசிகள் போன்ற பலவற்றிலும் பாவிக்கப்படுகிறது. ஒரே இடத்தில் பல அறைகளுக்கிடையிலும்,வாகனங்களில் இருந்து அருகே உள்ள கணினிகளுடன்,அலுவலகங்களில் மற்றும் பொது இடங்களிலும்(Public Hotspot) இணைய இணைப்பைப் WiFi மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.இதற்கு மடிக்கணினி நன்கு உபயோகமாக இருக்கும். ஒருவரின் WiFi ஐ, வேறொருவர் பாவித்துக் கொண்டிருந்தால், அவருடைய இணைய இணைப்பின் வேகம் குறைவடையும். அதை வைத்து யாராவது நமது இணையத்தைப் பாவிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும்.

மற்றவர்கள் WiFi இணைப்பைப் பெற அவர்களின் கடவுச்சொல் தேவைப்படுகிறது. இதைப் பெற crack செய்பவர்கள்,சில மென்பொருட்களைப் பாவிப்பவர்கள் என வேறுபடுகிறார்கள்.

இந்த பாஸ்வேட்களை திருடாமல், WirelessKeyView என்ற மென்பொருளின் மூலம்,பாஸ்வேட் இல்லாமலேயே பாவிக்க முடியும். அதாவது crack செய்ய வேண்டியதில்லை.அத்துடன் வேறு சில முறைகளில் மென்பொருட்களை பாவிக்காது, பாஸ்வேட் இல்லாமல் WiFi மூலம் இணைப்பை பெற முடியும்.

கருத்துரையிடுக Disqus

 
Top