0
• அரும்பும் நிலையில் அரும்பு

 • மொக்கு விடும் நிலை மொட்டு

 • முகிழ்க்கும் நிலை முகை

 • மலரும் நிலை மலர்

 • மலர்ந்த நிலை அலர்

 • வாடும் நிலை வீ

 • வதங்கும் நிலை செம்மல்


1.அரும்பு - அரும்பும் நிலை. பூக்கும் செடிகொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் மொட்டு அல்லது மொக்குள் நிலைக்கும் மிக முன்னே மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு அல்லது மொக்கு நிலையைஅடையும். அரும்பின் மூன்று நிலைகள் - *நனை, *முகை, *மொக்குள்.

2.மொட்டு - மொக்குவிடும் நிலை. அரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை.

3.முகை - முகிழ்விக்கும் நிலை.
எ.கா:
பாடிமிழ் விடர்முகை முழங்க ஆடுமழை இறுத்ததெங் கோடுயர் குன்றே (நற்றிணை)
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் (திரைப்பாடல்)

4.மலர் - மலரும் நிலை

5.அலர் - மலர்ந்த நிலை. அல் + அர் = அலர்; விரி-தல்.

6.வீ - வாடும் நிலை. வீ என்பது ஓரெழுத்து ஒரு மொழியாகும். . இதற்கு வீழுகின்ற அல்லது வீழ்ந்த மலர் என்றுப் பொருள்.
எ.கா:
”கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்..” (குறுந்தொகை)

7.செம்மல் - வதங்கும் நிலை

இதே போன்று தாவர இனத்தில் ஓர் இலையின் வளர்ச்சி நிலையில் பல்வேறு வகையான பருவத்தைச் சுட்டும் சொற்கள் உள்ளன. கொழுந்து, தளிர், இலை, பழுப்பு, சருகு ஆகிய சொற்கள் இலையின் பல பருவங்களை வெளிப்படுத்துவன.


கருத்துரையிடுக Disqus

 
Top