0
பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார்களே! ஏழு பிறவியிலும் மனிதனாகவே பிறப்பெடுக்க முடியுமா? அப்பிறவிகள் என்னென்ன :

தேவர், 

மனிதர், 
விலங்கு, 
பறவை,
ஊர்வன, 
நீர்வாழ்வன, 
தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.

இதை

"புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி
பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்
கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
எம்பெருமான்''

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார்.
பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.

கர்ம வினைகளை இந்தப்பிறவியுடன் தீர்த்துக் கொள்ள வழி ஏதும் உண்டா:

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் கர்ம வினைகள் நீங்கும் என்று தான் ஞானசம்பந்தர், பெரியாழ்வார் போன்றோர் கூறியுள்ளனர். எத்தனை பேர் இதனை முழுமையாக கடைபிடிக்கிறோம்? கர்ம வினைகள் என்பது என்னவென்றால் நாம் பல பிறவிகளில் செய்திருக்கும் பாவ புண்ணியங்களின் சேமிக்கப்பட்ட பலன்களாகும். அதாவது நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமிப்பது போன்றது. நம் பணம் முழுமையாக செலவாகும் வரை நமது வங்கிக் கணக்கு முடியாது. அதுபோல நமது கர்ம வினைகளின் பலா பலன்களை, அதாவது இன்ப துன்பங்களை நாம் அனுபவித்துத் தீர்க்கும் வரை, வினை சேமிப்பு தீராது. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இறைவழிபாடு, தர்ம சிந்தனை, நற்செயல் இவைகளைச் செய்து வினை நீக்கம் பெறுவது தான் இப்பிறவியின் குறிக்கோள். மேலும் மேலும் தவறுகளைச் செய்து வினை சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு அல்ல.

கருத்துரையிடுக Disqus

 
Top