0
Posted Image

‘ஹேக்’ செய்யப்பட்ட மின் அஞ்சல் கணக்கை திரும்பப் பெற இரண்டு வழிகள் உள்ளன.

1. ஜிமெயில் கணக்கு தொடங்கியபோது உங்களுக்குச் சொந்தமான மற்றொரு மின் அஞ்சல் முகவரி கொடுத்திருந்தீர்களென்றால், Password Recovery வசதியைப் பயன்படுத்தலாம். பிறந்த தேதி, பின் கோடு போன்ற சில பெர்சனல் விவரங்கள் பொருத்தமாக இருப்பின், புதிய பாஸ்வேர்டுக்கான இணைப்பு அந்த மின் அஞ்சலுக்கு அனுப்பப்படும். இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.. உங்களது ஜிமெயிலை ஹேக்கிங் செய்தவர், மாற்று மின் அஞ்சல் முகவரியையும் மாற்றியிருக்க வாய்ப்பு உண்டு. இது நடந்திருந்தால், அடுத்த வழியை முயற்சியுங்கள்.

2. இந்தப் பிரச்னையை ரிப்போர்ட் செய்து, நிவர்த்தி செய்வதற்கென்றே கூகுள், வலைப்பக்கம் ஒன்றை வைத்திருக்கிறது. அதை பயன்படுத்திப் புகார் கொடுக்கலாம். பொதுவாக, அனைத்து நாட்டு சட்டங்களின்படியும் ஹேக்கிங், ஹைஜாக்கிங் போன்றவை சட்டமீறல்களே! என்றாலும், இதை ஆராய்ந்தறிந்து தண்டனை அளிப்பது மிக அரிது. மின் அஞ்சல் பாதுகாப்பு விஷயத்தில்‘வரும் முன் காப்போம்’ பாலிசியே சிறந்தது.


* ஜிமெயில் 2Step Authentication என்ற வசதியைக் கொடுக்கிறது. உங்களது மொபைல் எண்ணை ஜிமெயில் அக்கவுன்டுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். பிரச்னை ஏற்படும் போது, அந்த மொபைலிலேயே புதிய பாஸ்வேர்ட் பெற முடியும். மொபைல் எண் மாற்றினால், மறக்காமல் மெயிலிலும் அப்டேட் செய்துவிட வேண்டும்.

* ஜிமெயிலை கணினியில் இருந்து பயன்படுத்தும்போது, Account Activity என்ற லிங்க் கீழ்ப் பகுதியில் இருக்கும். அதை சொடுக்கினால், எந்த இடங்களில், எந்தெந்த சாதனங்களில் (கம்ப்யூட்டர், மொபைல், டேப்லட்) உங்களது ஜிமெயில் திறக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரியாத இடங்களில் இருந்து திறக்கப்பட்டிருந்தால், அவற்றில் இருந்து Sign Out செய்வதுடன், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றுவதும் நல்லது.


If your Gmail / Google account has been hacked or compromised, this tutorial provides the steps to recovering your account and verifying if it was actually hacked.

Gmail Compromised Account Page:
https://support.google.com/
 

கருத்துரையிடுக Disqus

 
Top