ஜியோஸ்பேஷியல்
தொழில்நுட்பம் அல்லது ஜியோமேடிக்ஸ் என்பது பயன்பாட்டை தகவல்
தொழில்நுட்பத்துடன் இணைக்கும் ஒரு அறிவியலாகும். வான்வெளி ஆராய்ச்சி
மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தற்போதைய முனைப்பு மற்றும்
முன்னேற்றமானது ஜீயோஸ்பேஷியல் துறையில் பல வேலைவாய்ப்புகளை ஆர்வமுள்ளவர்கள்
பெறும் நிலையை உருவாக்கியுள்ளது.
பயன்பாடுகள்:
பலவிதமான துறைகள் மற்றும் பயனர்களிடத்தில் முடிவெடுக்க உதவும் ஒரு கருவியாக இந்த ஜியோஸ்பேஷயல் தொழில்நுட்பம் பயன்படுகிறது. கையால் தயாரிக்கப்பட்ட வரைபடங்களை உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளாக மாற்றி அதன்மூலம் குறிப்பிட்ட இடங்களை கண்டுபிடிக்க பல நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
வெளிநாட்டில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிகாட்டவும், மாற்று போக்குவரத்து முறைகளை கண்டறியவும், தேர்தலுக்கான வாக்காளர் வரையறை பகுதிகளை மாற்றி அமைக்கவும், விவசாயம் மற்றும் வறட்சி நிலைகளை கண்டறியவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மேலே கூறப்பட்ட பயன்பாடுகளுள் சிலவற்றுக்காக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
சவால்கள்:
ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பமானது, இந்தியாவில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்திருக்கும் இந்த காலகட்டத்தில் இத்துறை சார்ந்த நிபுணர்கள், இதற்கான புதிய மென்பொருள், வன்பொருள் ( ஹார்டுவேர்) மற்றும் மேலாண்மை பயிற்சிகள் ஆகியவற்றை உருவாக்குவதில் சிக்கல்களை சந்திந்து கொண்டுள்ளார்கள். வசதிகளை நகலாக்குதல், ஒருங்கிணைப்பு குறைபாடு, ஒத்திசைவற்ற தரவு கட்டமைப்புகள், நிலையற்ற தரக்கட்டுப்பாடு, வலைப் பயன்பாடுகளின் நீடித்த மேம்பாடு போன்ற அம்சங்கள் இப்பணியை சவாலானதாகவும், திறன்மிக்கதாகவும் மாற்றி உள்ளன.
இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
அசாம் இன்ஜினியரிங் காலேஜ் - கவுகாத்தி.
இந்தியன் ஜியோன்பார்மேடிக்ஸ் சென்டர் - கொல்கத்தா.
சிம்பியோசிஸ் இன்ஸ்டியூட் ஆப் ஜியோன்பார்மேடிக்ஸ் - புனே.
சிவாஜி யுனிவர்சிட்டி - குவாலியர்.
டிபார்ட்மென்ட் ஆப் ஜியோன்பார்மேடிக்ஸ் ( மங்களூர் யுனிவர்சிட்டி) - மங்களூர்.
போன்றவை இத்துறை சார்ந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்.
தகுதிகள்:
புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல் மற்றும் கணிப்பொறி அறிவியல் போன்ற பிரிவுகளில் படித்த மாணவர்கள் இப்படிப்பை தேர்வு செய்யலாம். மேலும், ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பத்தில் 2 அல்லது 4 வருட பட்டப்படிப்பில் ஏதேனும் ஒன்றில் ஒருவர் சேரலாம். அதேசமயம், இத்துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கும் பல நிறுவனங்கள் நடைமுறை அனுபவம் உள்ளவர்க்கே முன்னுரிமை வழங்குகின்றன. இண்டன்ஷிப், வாலன்டியர் ப்ராஜக்ட்ஸ் மற்றும் பகுதிநேர பணிகளின் மூலமாக இத்துறை ஆர்வலர்கள் சிறந்த நடைமுறை அனுபவங்களை பெறலாம்.
வேலை வாய்ப்புகள்:

இத்துறையில் பெருமளவிலான பணி வாய்ப்புகள் அரசுத் துறைகளிலேயே உள்ளன. மேலும், இத்துறை சார்ந்த ஒருவர்,மென்பொருள் மேம்பாட்டு நிறவனங்களிலும் பணிக்கு சேரலாம். இந்த தொழில்நுட்பத்தில் முக்கிய பணிநிலைகள் உள்ளன. அவையாவன,
1. ஜி.ஐ.எஸ் டெக்னீஷியன் - ( டேட்டா கன்வெர்ஷன், டிஜிடைஷிங், டேட்டா ப்ராஸஸிங் போன்றவை இப்பணி நிலையில் அடங்கும்.)
2. ஜி.ஐ.எஸ் அனலிஸ்ட்.
3. ஜி.ஐ.எஸ் ஸ்பெஷலிஸ்ட்
4. ஜி.ஐ.எஸ் கன்சல்டன்ட்
5. ஜி.ஐ.எஸ் டெவலப்பர்.
சம்பளம்:
ஒரு நபரின் அனுபவம், கல்வி, பதவிநிலை, பணிபுரியும் நிறுவனம், மற்றும் இடம் ஆகியவற்றை பொறுத்து சம்பளம் வேறுபடுகிறது. இத்துறையில் ஒரு வருட அனுபவம் கொண்ட ஒருவர் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் முதல், ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். கற்றுக் கொள்ளும் ஆர்வமும், தொழில்நுட்பத்தை கையாளும் நுண்ணறிவும் கொண்ட எவரும் இத்துறையில் எளிதில் சாதிக்க முடியும்.
கருத்துரையிடுக Facebook Disqus