0
x2HbMqI.gif


இந்திய ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் சார்ஜ்மேன் (Chargeman) பதவிக்காக இன்ஜினீயரிங் டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.


காலிப்பணியிடங்கள்


மொத்தம் 1572. மெக்கானிக்கல்-876, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி-23, எலக்ட்ரிகல்-133, கெமிக்கல்-296, சிவில்-39, மெட்டலர்ஜி-46, க்ளோத்திங் டெக்னாலஜி-32, லெதர் டெக்னாலஜி-4, நான்-டெக்னிக்கல் (ஸ்டோர்ஸ்)-41, நான்-டெக்னிக்கல்(ஸ்டோர்ஸ் தவிர்த்த பிற பிரிவு)-59, ஆட்டோமொபைல்-3, எலக்ட்ரானிக்ஸ்-20.

வயதுவரம்பு


09.08.2014 அன்று பொதுப்பிரிவினருக்கு 27, ஓ.பி.சி.யினருக்கு 30, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 32.


கல்வித்தகுதி

மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவின் பணியிடங்களுக்கு அந்தந்த பிரிவில் 3 வருட டிப்ளமோ படிப்போ அதற்கு இணையான படிப்போ முடித்திருக்க வேண்டும்.

கெமிக்கல்,மெட்டலர்ஜி, க்ளோத்திங் டெக்னாலஜி, லெதர் டெக்னாலஜி ஆகிய பிரிவின் பணியிடங்களுக்கு, டிப்ளமோ அல்லது அதற்கு இணையான படிப்பு அல்லது பி.எஸ்சி.யில் வேதியியல் பாடம் படித்திருக்க வேண்டும்.

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரிவின் பணியிடங்களுக்கு இத்துறையில் ஏ லெவல் சான்றிதழோ கம்ப்யூட்டர் சயின்ஸில் பட்டமோ பெற்றிருக்க வேண்டும்.

நான் டெக்னிக்கல் பிரிவின் பணியிடங்களுக்குப் பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கும் முறை

எழுத்துத்தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு சென்னை, திருச்சி, கொல்கத்தா, புனே உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ. 100. இதை பேங்க் சலான் மூலம் “PRINCIPAL DIRECTOR, RECRUITMENT FUND OFRB, AMBAJHARI- NAGPUR” என்பவருக்கு மாற்றத்தக்க வகையில் செலுத்த வேண்டும். பெண்களும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினரும், மாற்றுத்திறனாளிகளும், முன்னாள் ராணுவத்தினரும் கட்டணம் கட்ட வேண்டியதில்லை.


விண்ணப்பிக்கும் முறை


விண்ணப்பிக்க தகுதியுடையோர் http://www.i-register.org/ioforeg/index.php என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கடைசித் தேதி: 09.08.2014.

கூடுதல் விவரங்களுக்கு:

07104-220075, 220095, 220061, 220070 என்னும் தொலைபேசி இணைப்புகளில் வார நாள்களில் 09:00 மணியிலிருந்து மாலை 05:30 மணிக்குள் அழைக்கலாம். http://ofbindia.gov.in/download/Short%20NoticeDR-CM2014%20.pdf என்னும் அறிவிப்பையும் பார்க்கலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top