0
ஏசி சோலார் பேனல் - இரண்டாம் தலை முறை சோலார் சிஸ்டம்.

இதுவரை இந்த பிளாக்கில் நாம் பார்த்தது ஆரம்ப கட்ட நிலையில் இருந்த சோலார் மின்சாரம் தயாரிக்கும் சிஸ்டத்தை பற்றியது. அதாவது சோலார் பேனல்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் டி.சி. மின்சாரம், சார்ஜ் ரெகுலேட்டர் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு பாட்டரியில் சேமிக்கப்படும். அதன் பின் மின்வாரிய மின்சாரம் இல்லாத நிலையில் பாட்டரியில் இருக்கும் மின்சாரம் டிசி-ஏசி இன்வெர்ட்டர் மூலமாக 230 ஏ.சி. மின்சாரமாக மாற்றப்பட்டு உபயோகிக்கப்படும். இது ஆஃப் கிரிட் சோலார் சிஸ்டம் ஆகும்.


சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் சோலார் பானலில் உற்பத்தியாகும் டிசி மின்சாரம் சார்ஜ் ரெகுலேட்டர் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு, இன்வெர்ட்டரில் 230 வோல்ட் மின்சாரமாக மாற்றப்பட்டு நேரடியாக உபயோகப்படுத்தப்படும். எஞ்சிய மின்சாரம் மின்வாரிய சப்ளைக்கு அனுப்பப்படும். இது கிரீட்- டை சோலார் சிஸ்டம் ஆகும்.


இப்பொழுது கிரீட்-டை சோலார் சிஸ்டத்தை அதன் செயல் திறனை அதிகப்படுத்தி எளிய அமைப்பாக "பிளக் அண்டு பிளே" ஆக மாற்றியுள்ளனர். இதில் சோலார் பேனல் மற்றும் சோலார் பேனலின் பின் பக்கம் பொருத்தக்கூடிய, மிகவும் சிறிய அளவிலான (6.5 இஞ்சு நீளம், 6.5 இஞ்சு அகலம், 1 இஞ்சு கனம்)  மைக்ரோ இன்வெர்ட்டர் என்ற இரு சாதனங்கள் மட்டுமே உண்டு.

கீழே மைக்ரோ இன்வெர்ட்டரின் படம்  காட்டப்பட்டுள்ளது.




இதில் "TO SOLAR PANEL" என குறிக்கப்பட்டுள்ள இரண்டு வயர்களையும் சோலார் பேனலுடன் இணைக்க வேண்டும். இது டி.சி. இன்புட் ஆகும். "230 VOLT AC" என குறிப்பிடப்பட்டுள்ள சாக்கெட்டில் 230 Volt AC மின்சாரம் வெளிவரும்.

தற்பொழுது மைக்ரோ இன்வெர்ட்டர்கள் 250 வாட் பேனல்களில் இணைக்கக்கூடியதாகவே தயாரிக்கப்படுகிறது.  நமக்கு ஒரு கிலோ வாட் ( 1000 வாட்) தயாரிக்கக்கூடிய சிஸ்டம் தேவை என்றால் நான்கு மைக்ரோ இன்வெர்ட்டர்கள், நான்கு 250 வாட் சோலார் பேனல்கள் தேவை. இணைப்பு விபரத்தை கீழே உள்ள படம் விளக்குகிறது.


( ஆறு சோலார் பேனல்கள் + ஆறு மைக்ரோ இன்வெர்ட்டர்கள் சிஸ்டம்)




மொட்டைமாடியில் பொருத்தப்பட்டுள்ள சோலார் ஆரேயிலிருந்து (பேனல்களிலிருந்து) நேரடியாக வெளி வரும் 230 வோல்ட் ஏசி மின்சாரம், மெயின் சுவிட்ச்சின் இன்புட் அதாவது மீட்டரிலிருந்து இணைக்கப்பட்டுள்ள வயருடன்(பேஸ் வயருடன் பேஸ் வயரையும், நியூட்ரல் வயருடன் நியூட்ரலையும்) இணைக்க வேண்டும். இது சிங்கிள் ஃபேஸ் சர்வீஸ்-க்கு.

உங்கள் வீட்டில் மும் முனை மின் இணைப்பு இருந்தால் நிச்சயமாக ஆட்டோ ஃபேஸ் சேஞ்சர் அல்லது ஃபேஸ் சேஞ்ச் ஓவர் சுவிட்ச் மாட்டியிருப்பீர்கள். உங்கள் வீட்டின் லோடை மூன்றாக பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பேஸ் சப்ளை கிடைக்குமாறு இணைக்கப்பட்டிருக்கும்.  இந்த இணைப்பை மாற்ற வேண்டும். அதாவது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள லோடுகளை( மூன்று சர்க்கியூட் வயர்களையும் ஒன்றாக இணைத்து, ஒரு சிங்கிள் பேஸ் மெயின் சுவிட்ச்சை தனியாக பொருத்தி அதன் அவுட்புட் டெர்மினலில் இணைக்க வேண்டும். சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சின் அவுட் புட்டை சிங்கிள் ஃபேஸ் மெயின் சுவிட்ச்சின் இன்புட்டுடன் இணைக்க வேண்டும். இந்த இன்புட் முனையுடன் தான் சோலார் ஆரேயிலிருந்து வரும் அவுட்புட்(230வோல்ட் ஏசி) வயரை இணைக்க வேண்டும்.

வீடுகளில் Three Phase Grid-Tie சோலார் சிஸ்டம் அமைக்க அரசிடம் திட்டம் எதுவும் இல்லாததால் அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம் என்பதால் இங்கு விவரிக்கப்படவில்லை.

மைக்ரோ இன்வெர்ட்டர்கள் வெளிநாடுகளில்தான் தயாரிக்கப்படுகிறது. இதற்கும் சோலார் பேனல்கள் போலவே 25 ஆண்டுகள் உத்தரவாதம் உண்டு. இதன் விலை 125 -150 அமெரிக்க டாலர்கள்(ரூ.7500 -9000)ஆகும்.

மைக்ரோ இன்வெர்ட்டர் பொருத்தப்பட்ட சோலார் சிஸ்டம் அமைக்க ஆகும் செலவு விபரம்.

250 வாட் சோலார் பேனல்கள் 4 = ரூ.55,000( Rs.55 per Watt)
மைக்ரோ இன்வெர்ட்டர்கள் 4   = ரூ. 36,000( அதிக பட்சம்)

ஆக மொத்தம்                                  = ரூ. 90,000

சாதாரண கிரிட் டை சோலார் சிஸ்டத்துக்கு ஆகும் அதே செலவுதான்.

நன்மைகள்: 25% அதிகமான மின் உற்பத்தி திறன். 25 ஆண்டுக்கு இன்வெர்ட்டருக்கான உத்தரவாதம்

கருத்துரையிடுக Disqus

 
Top