0
முதல்தலைமுறை
RICCu5L.png


1.லெக்கின்ஸ் அணியும் பெண்களை பார்த்த முதல் தலைமுறை நாமதான் ..

2.எங்கயாவது வெளிய போனா என்ஜாய் பண்ணாம ஃபோட்டோ எடுக்க ஃபோன தூக்கிட்டு திரியுற முதல்தலைமுறை நாமதான்..

3.இலவசங்களுக்கு ஆசைப்பட்ட கேடுகெட்ட முதல்தலைமுறை நாமதான்..

4.பேஸ் புக் யூஸ் பண்ணி முன்னுக்கு வந்த முதல் தலைமுறை நாம தான் ..

5.பண்டிகை நாட்களை டிவியிலும் , இணையத்திலும் பொழுதை கழிக்கும் முதல்தலைமுறை நாமதான்

6.நம்ம வீட்டுக்குப் பக்கத்து தெருவோட பெயரை மறந்துட்டு அதை அந்தத் தெரு எங்க இருக்கு என்று GPS ல் தேடும் முதல்தலைமுறை நாமதான்

7. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் முதல்தலைமுறை நாமதான்.

8.பிட்சா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிட்ட முதல்தலைமுறை நாமதான்.

9.தன் காசுல பொண்ணுகளுக்கு டாப் அப் பண்ணி விடும் முதல்தலைமுறை நாமதான்.

10.கூட்டுக் குடும்பத்தை மறந்த உறவுகளை தொலைத்த முதல்தலைமுறை நாமதான்.



கடைசி தலைமுறை


86lS81m.jpg?1

1.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்

2.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

3.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!

4.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

5.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

6.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

7.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

8.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

9.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

10.நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

11.மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க டை சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

இன்னும் எது எதுக்கெல்லாம் நாம கடைசி தலைமுறையா இருந்திருக்கோம்ன்னு தெரிஞ்சா வசதியாயிருக்கும்.

கருத்துரையிடுக Disqus

 
Top