வாகன ஓட்டிகளிடம் டராஃபிக் போலிஸ் பணம் பிடுங்குவது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.. பொதுமக்களிடம் இருந்து பிடுங்கும் பணம் அரசாங்கத்திற்கு சென்றாலும் பரவாயில் என்று சொல்லலாம் ஆனால் மாதா மாதம் சம்பளம் வாங்கும் டராஃபிக் போலிஸ் வீட்டுக்க தான் செல்கின்றது..
லைசன்ஸ் இல்லாமல் வந்த ஒரு வாகன ஓட்டியிடம் ட்ராஃபிக் போலிஸ் லஞ்சம் வாங்குவதை வாகன ஓட்டி போலிசுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதில் வாகன ஓட்டி ”நான் 50 ரூபாய் தான் தருவேன்” என்கின்றார் அதற்கு போலிஸ் ”கூட கொஞ்சம் போட்டு கொடுப்பா காதுல ஹெட்போனுல்லாம் மாட்டிக்கிட்டு வந்தல்ல” என்கின்றார். போலிஸ் பேசும் ஆடியோவும் இதில் பதிவாகியுள்ளது.
கடைசியில் வெறும் 50 ரூபாய் வாங்கிக் கொண்டு வாகன ஓட்டியை போலிஸ் விடுகின்றார்…
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தான் இந்த அசிங்கம்..
இந்திய நாடு இப்படி இருந்தால் பிறகு எப்படி வல்லரசாகும் ?.
இந்தியாவில் லஞ்ச ஒழுப்புத்துறை ஒன்று எதற்கு தான் உள்ளது என தெரியவில்லை
கருத்துரையிடுக Facebook Disqus