பொதுவாக புதிய கார் வாங்குபவர்கள் வாகன கடன், டீலரின் சலுகைகள் மற்றும் இலவசங்களைப் பற்றி கவனிக்கும் அளவிற்கு காப்பீட்டை பற்றி கவனிப்பதில்லை.
நம் பழைய காரை விற்கும் சமயம் நிறைய பேர் தங்கள் கார் காப்பீட்டையும் சேர்த்தே விற்று விடுவர். ஆனால் அப்படி செய்யாமல் உரிமையை மட்டும் மாற்றிக் கொடுத்துவிட்டு ஆர்சி புத்தகத்தில் பெயர் மாற்றத்தை குறிப்பிட்டுள்ளதை ஒரே ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காப்பியை காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி அவர்களிடமிருந்து என்சிபி சான்றிதழையோ அல்லது ஹோல்டிங் கடிதத்தையோ பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த கடிதம் மூன்று வருடம் வரை செல்லக் கூடியதாகும்.
நாம் புதிய கார் வாங்கும் போது இக்கடிதத்தை நம் டீலரிடம் ஒப்படைத்து புதிய காரின் காப்பீட்டில் சலுகையை பெற வேண்டும். இந்நிலையில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் சில நேரங்களில் காப்பீட்டு நிறுவனங்களை விட வாகன உற்பத்தியாளரின் காப்பீட்டுத் திட்டங்கள் விலை குறைவாய் இருக்கும்.
நாம் ஏற்கனவே வைத்துள்ள காப்பீட்டு திட்டமும் அந்நிறுவனமும் நமக்கு திருப்பதிகரமாய் இருக்கும் பட்சத்தில் அதே நிறுவனத்திற்கு நம் புதிய காரின் இன்வாய்சையும், சேசிஸ் நெம்பரையும் கொடுத்துவிட்டால் அவர்களே நம் என்சிபியை உபயோகித்து காப்பீட்டுத் தொகையில் சலுகையை வழங்குவர். இப்படி கொடுக்கப்படும் கவர் நோட்டை நாம் டீலரிடம் வழங்கி காரை பதிவு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்
ப்ரீமியம் கார் வாங்குபவர்கள் ஜீரோ டெம்ரிசியேஷன் கார் இன்சூரன்ஸ் செய்வது நல்லது. ஏனென்றால் இக்கார்களின் பாகங்கள் எல்லாமே ப்ரீமியம் விலையுள்ளவையாகவே இருக்கும். நம் பழைய காரை விற்காமலே புதிய கார் வாங்குகிறோம் என்றால் முதல் வருடத்தில் பிரீமியம் சலுகை கிடைக்காது. பழைய காரை விற்றவுடன் என்சிபி வாங்கிக் கொண்டு இரண்டாம் வருட பிரீமியத்தில் சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.
என்சிபியைப் பெற, காரை முறையாய் பராமரிப்பது, பாதுகாப்பது கவனமாய் ஓட்டுவது போன்றவைகளை பின்பற்ற வேண்டும். நம்முடைய என்சிபியின் 50% ரூபாய் 10000 என்று வைத்துக் கொள்வோம். அப்படியிருக்கையில் நம் காரின் ரூபாய் 5000 மதிப்புள்ள மியூசிக் சிஸ்டம் திருடு போய்விட்டால் நாம் அதை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெறாமல் நாமாகவே மாற்றிக் கொள்ளலாம். இதனால் 5000 ரூபாய்க்கு பதில் 10000 ரூபாய்க்கான என்சிபி (நோ க்லெயிம் போனஸ்) நமக்கு கிடைக்கும்.
ஒரு விலை குறைந்த கார் நம்மிடம் இருக்கையில் ஒரே விலை உயர்ந்த கார் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது பழைய காரின் காப்பீட்டை ரத்து செய்து விட்டு என்சிபியை பெற்றுக் கொண்டு அதை புதிய காருக்கு மாற்றிக் கொள்ளலாம். பழைய காரை வேறு எந்த நிறுவனத்தில் காப்பீடு செய்து கொள்வதோ அல்லது குடும்பத்தின் வேறு ஒருவர் பெயரில் வாகனத்தை மாற்றிக் கொள்வதோ செய்யலாம்.
கருத்துரையிடுக Facebook Disqus