ஒளிவு மறைவற்ற அரசு நிர்வாகத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் தொடர்பாக தகவல் அறிய விரும்பும் நபர்கள், தகவல் அறியும் உரிமை அலுவலகத்திற்கு சென்று ஒரு தகவலுக்கு ரூ. 10 கட்டணம் செலுத்தி மனு செய்தால், மனுதாரர் அறிய விரும்பும் தகவல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கையொப்பத்துடன் வீடு தேடி வரும் வகையில் இச்சட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
வயதான நபர்கள் மற்றும் பெண்கள் தகவல் அறியும் உரிமை மாவட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று மனு செய்வதில் சில சிரமங்கள் இருப்பதாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இதனையடுத்து,
இந்த புதிய சேவையை பெற விரும்பும் பொதுமக்கள், பாரத ஸ்டேட் வங்கி அல்லது அதன் குழுமத்தை சேர்ந்த பிற வங்கி கணக்கின் வாயிலாக ரூ. 10/- ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி, தாங்கள் அறிய விரும்பும் தகவலுக்கான மனுவை சமர்ப்பிக்கலாம்.
இதேபோல், இதர கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலமாகவும் மனுவுக்கான கட்டணத்தை வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலமாக செலுத்தி இனி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த புதிய திட்டத்தின் முதல்கட்டமாக டெல்லியில் உள்ள மத்திய அரசு தொடர்பான அமைச்சகம் சார்ந்த தகவல்களை மட்டுமே தற்போதைக்கு பெற முடியும்.விரைவில் இந்த வசதி அனைத்து துறைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Now, file RTI applications and pay fees online!
**************************
In a step towards greater transparency, the government has started a unique facility of submitting RTI applications and fees online.The portal — www.rtionline.gov.in
கருத்துரையிடுக Facebook Disqus