நிலவை நாம் எப்போது பார்த்தாலும் ஔவைப்பாட்டி அங்கே இருப்பாள். அப்படியானால் நிலவின் மறுபக்கம் எப்படி இருக்கும்? நாம் பார்க்க முடியாதா? யாராவது கேட்டதுண்டா? வெரி பிசியான நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள்.
அல்லது குழந்தைகள் ஔவைப்பாட்டியை பார்த்துக் கொண்டு நிலாச்சோறு சாப்பிடட்டும் என்ற நல்ல எண்ணமும் காரணமாக இருக்கலாம்.
சந்திரன் இப்படி தனது மறு பக்கத்தைக் காட்டாமல், அச்சில் சுழல்வதற்கு பூமியின் ஈர்ப்பு சக்தி தடுப்பது தான் காரணம்.
எனினும் 1959 ஆம் ஆண்டில் ரூசியா ( அப்போதைய சோவியத் யூனியன்) அனுப்பிய லூனா 3 விண்கலம், சந்திரனை அடைந்து சந்திரனின் மறுபக்கத்தைப் படம் எடுத்து அனுப்பியது. அப்போது தான் மனிதன் சந்திரனின் மறுபுறம் இருட்டல்ல என்பதைத் முதல் முறையாக தெரிந்து கொண்டான்.1968 இல் அப்பொலோ 8 மூலம் மனிதக் கண்களால் பார்க்க முடிந்தது.
இதற்கு முன்னர் நிலாவின் மறு பக்கத்தை நிலவின் இருண்ட பக்கம் என்றும், பின்னர் தொலைவுப் பக்கம் என்றும் சொல்லப்பட்டது. (dark side of the Moon, far side of the Moon )
இதுதான் நிலாவின் மறுபக்கம். ஔவைப்பாட்டி அங்கில்லை.
கருத்துரையிடுக Facebook Disqus