0

சுப்பர் மூன் -Super Moon- பற்றி முன்னர் எழுதி இருந்தேன். வருகிற ஆகத்து 10 ஆம் தேதி பௌர்ணமி நாளன்று இரவு, முழு நிலவானது வழக்கத்தை விட சற்றே பெரியதாகத் தெரியும். அதாவது நிலா நமக்கு சற்றே பக்கத்தில் இருக்கும்.


அன்றைய தினம் நிலவு வழக்கத்தை விட சுமார் 14 சதவிகித அளவுக்குப் பெரிதாக இருக்கும். நிலவின் பிரகாசம் வழக்கத்தைவிட 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி கிட்டே வருவதற்குக் காரணம், பூமியை சந்திரன் நீள்வட்டமாக சுற்றி வருவதாகும்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் 3,56,922 கிலோ மீட்டராக இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் ஜூலை 28 ஆம் தேதியன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் இருந்த தூரம் 4,06,547 கிலோ மீட்டர்.
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 28 நாட்கள் ஆகின்றன. ஆகவே அது பூமிக்கு சற்றே அருகில் இருப்பதும், தள்ளி இருப்பதும் ஒவ்வொரு மாதமும் நிகழ்வதாகும்.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் குறைவாக இருந்து, அன்றைய தினம் பௌர்ணமியாகவும் இருந்தால், அன்று இரவு தெரிகின்ற முழு நிலவை, சூப்பர் நிலா (Super Moon) என்று வருணிக்கிறார்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top