மனிதகுலத்தை
மருளவைக்கும் நோய்களில் புற்றுநோய்க்குதான் முதல் இடம். இப்போதெல்லாம்
காய்ச்சல், தலைவலியைப் போல, 'அவருக்கு பிளட் கேன்சர்’, 'இவருக்கு பிரெஸ்ட்
கேன்சர்’ என்று சர்வசாதாரணமாகக் கேட்கமுடிகிறது. நோயாளிகளை அதிக
சிரமத்துக்கு உள்ளாக்காமல், அதே சமயத்தில் வேகம், நேரம்,
செயல்பாட்டுத்தன்மை என நோய்களை கண்டறியும், அதிநவீன மருத்துவக் கருவிகளும்
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக் கின்றன.
அந்த
வரிசையில் புற்றுநோய் செல்களை அழிக்க வந்திருக்கும் நவீன தொழில்நுட்பம்,
ஃப்ளாட்டனிங் ஃபில்ட்டர் ஃப்ரீ எக்ஸ்ரே பீம். இந்தியாவில் இரண்டு இடங்களில்
மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தின்படி கதிர்வீச்சு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. அதில் ஒன்று, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எச்.சி.ஜி
மையம்.
புற்றுநோய்
சிகிச்சையின் போக்கையே மாற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்து எச்.சி.ஜி
புற்றுநோய் சிகிச்சை மையத்தின் கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்
மகேஷ்குமார் என்.உபசானி:
'நுரையீரல், கல்லீரல், ப்ராஸ்டேட் உள்ளிட்ட உடலில் எந்த ஒரு பகுதியிலும்
அல்லது எந்த ஓர் உறுப்பிலும் ஏற்பட்ட புற்றுநோய் செல்களை அழிக்க லீனியர்
ஆக்சிலரேட்டர்’ என்ற கதிர்வீச்சுக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்தக்
கருவியில் இருந்து வெளிப்படும் உயர்திறன் கொண்ட எக்ஸ்ரே கதிர், புற்றுநோய்
செல்களை மட்டும் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில
புற்றுநோயாளிகளுக்கு அதிக அளவில் கதிர்வீச்சு டோஸ் அளிக்க வேண்டி
யிருக்கும். ஆனால், அவர்களின் உடல் நிலை அதற்கு இடம் கொடுக்காது. ஆனால்,
கதிர்வீச்சைக் கொடுத்தால் மட்டுமே அவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டிய
நெருக்கடியும் இருக்கும். அத்தகைய நோயாளிகளுக்காக வந்திருப்பதுதான் ஃப்ளாட்
டனிங் ஃபில்ட்டர் ஃப்ரீ தொழில்நுட்பம்.
கதிர்வீச்சு
தேவைப்படும் நோயாளிகளுக்கு குறிப்பாக, நுரையீரல், கல்லீரல் போன்ற
புற்றுநோய்க்கு எஸ்.பி.ஆர்.டி மற்றும் எஸ்.ஆர்.எஸ் போன்ற சிகிச்சைகள்
அளிக்கப்படுகின்றன. அதாவது கதிர்வீச்சு செலுத்தப்படும் ஒவ்வொரு
பகுதியிலும்) அதிகபட்ச டோஸ் அளிக்கப் படுகிறது. இதற்கு ஒன்று முதல் இரண்டு
வாரங்கள் ஆகலாம். நோயின் தன்மையைப் பொறுத்து கதிர்வீச்சு செலுத்தப்படும்
கால அளவு மாறுபடும். கதிர்வீச்சு செலுத்தும்போது நோயாளி ஒரே நிலையில் ஐந்து
முதல் 10 நிமிடங்கள் அசையாமல் இருக்க வேண்டும். இதற்கெனவே பிரத்யேகக்
கருவிகள் பொருத்தப்படும். இதனால் நோயாளிகளுக்கு மேலும் அசவுகரியம்
இருந்தது.
இந்த
புதிய தொழில் நுட்பத்தில் இதுபோன்ற பிரச்னை இல்லை. அதிகபட்சமாக
நிமிடத்துக்கு 2400 எம்.யூ (மானிட்டர் யூனிட்) வரை கதிர்வீச்சை அளிக்க
முடியும். மேலும், மிகத் துல்லியமாக சரியான இடத்தில் கதிர்வீச்சைச்
செலுத்துவதன் மூலம் மற்ற சிகிச்சைகளில் ஏழு, எட்டு நிமிடங்கள் வரை
செலுத்தப்படும் கதிர்வீச்சு வெறும் இரண்டே நிமிடங்களில் செலுத்தப்
பட்டுவிடும். மொத்தத்தில், கதிர்வீச்சு சிகிச்சைக்கான கால அளவு நான்கில்
ஒன்றாக குறைந்துவிடும். இதனால் நோயாளி மூச்சைப் பிடித்துக்கொண்டு அசையாமல்
நீண்ட நேரம் இருக்கவேண்டிய அவஸ்தை இனி இல்லை. அதிக அளவில் கதிர்வீச்சு
செலுத்தப்பட்டாலும், அது புற்றுநோய் செல்களை மட்டுமே தாக்கி அழிக்கும்.
இதனால் அருகில் உள்ள நல்ல செல்கள் அழிக்கப்படுவது இல்லை. இந்த
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ப்ராஸ்டேட், நுரையீரல், கல்லீரல், மூளைக்
கட்டிகள், கழுத்து மற்றும் தலைப்பகுதியில் உள்ள புற்றுக் கட்டிகள் மற்றும்
ஓர் உறுப்பில் இருந்து மற்றொரு உறுப்புக்குப் பரவிய புற்றுநோய் வரை
அனைத்துக்கும் சிகிச்சை அளிக்கப்படும்' என்கிறார்.
கருத்துரையிடுக Facebook Disqus