தகவல் தொழில் நுட்ப உலகில் இப்போது நாம் அடிக்கடி கேட்கும் பெயர் க்ளவ்ட் (Cloud) கம்ப்யூட்டிங். அடிக்கடி பயன்படுத்தப்படுவதனாலேயே, இது குறிக்கும் பொருளும் பலவாறாக எண்ணப்படுகிறது. சரியாக இதன் பொருள் தான் என்ன? இதனைத் தெரிந்து கொள்வதனால் என்ன பயன்? அல்லது தெரிந்து கொள்ளாததனால் எதனை இழக்கிறோம்? இதனோடு தொடர்புடையதாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? அவை எவற்றைக் குறிக்கின்றன? இதற்கான சில விளக்கங்களையும் குறிப்புகளையும் இங்கு காணலாம்.
க்ளவ்ட் அறிமுகம்:
Cloud computing என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டின் பிரபலமான தகவல் தொழில் நுட்ப சொற்றொடராக இருந்தாலும், 1950 ஆம் ஆண்டிலேயே, இதன் வேர்கள் தென்பட்டன. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்களும், அதனுடன் இணைக்கப்பட்ட டெர்மினல்களையும் சற்று எண்ணிப்பார்த்தால், அன்றே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தொடங்கிவிட்டதனை அறியலாம். மெயின்பிரேம் சர்வருக்கும், அதன் டெர்மினல்களுக்குமான இன்றைய தொலைவு தான் மிக அதிகமாகி உள்ளது.
க்ளவ்ட் என்பது பல்வேறு கம்ப்யூட்டர்கள், மொத்தமாக இணைக்கப்பட்டு ஒரே ஒரு சிஸ்டத்தால் இயக்கப்படுவதாகும். க்ளவ்ட் என்பது எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளை (data storage, content delivery, or applications) வழங்கும் சாதனமாகும். இவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கம்ப்யூட்டிங் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதாவது, பயனாளர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்துகையில், எந்தவிதமான செட் அப் பணிகளையோ அல்லது க்ளவ்ட் சாதனத்தினை பராமரிக்கும் பணியினையோ மேற்கொள்ள வேண்டியதில்லை.
சரி, க்ளவ்ட் என்று ஏன் இதற்குப் பெயரிட்டனர்? யாருக்கும் இதன் காரணம் உறுதியாகத் தெரியவில்லை. பல கம்ப்யூட்டர்கள் இணைப்பினை தூரத்திலிருந்து பார்க்கும் போது, அவை அனைத்தும் சேர்ந்து ஒரு மேகக் கூட்டமாகத் தானே தெரியும். கூட்டமாகப் பறக்கும் வெட்டுக் கிளிகள் அல்லது வெளவால்களை எண்ணிப் பார்த்தால், இது புரியும். அதே கற்பனையைக் கம்ப்யூட்டர்களுக்கும் செலுத்திப் பார்த்தால், நாம் ஏன் இதனை க்ளவ்ட் என அழைக்கிறோம் என்பதுவும் புரியும். க்ளவ்ட் சாதனங்களின் அமைப்பினை இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. ஆயத்தப்படுத்தல் (Deployment) 2. சேவை தருதல் (Service).
முதல் வகையில் இயங்கும் க்ளவ்ட் அமைப்பினை இன்னும் சில பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அவை, 1. தன் பணிக்கான க்ளவ்ட் (Private cloud) இது ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு மட்டும் பயன்படும் வகையில் அமைக்கப்படுவதாகும். இதனை இவர்கள் இருக்கும் இடத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்பதில்லை. தூர இடங்களிலும் வைத்து இயக்கலாம். இந்த க்ளவ்ட் சேவையை, பயன்படுத்துபவர் அல்லது நிறுவனமே இயக்கலாம்; அல்லது இவர் சாராத ஒருவர் அல்லது நிறுவனம், இவர்களுக்காக அமைத்து இயக்கலாம்.
1. பொதுவான க்ளவ்ட்: பொது க்ளவ்ட் சேவை பொதுவான எவரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகின்றன. முதலில் சொல்லப்பட்ட தனி நபர் க்ளவ்ட் அமைப்பிற்கும், இதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. பயனாளர்கள் யார் என்பதில் மட்டுமே வேறுபாடு உண்டு.
2. கலப்பான க்ளவ்ட் இயக்கம் (Hybrid Cloud): ஒரு க்ளவ்ட் தனிநபர் மற்றும் பொதுவான எவருக்கும் என இரண்டு வகையினருக்கும் தன் சேவையினை வழங்குகையில் அது Hybrid Cloud என அழைக்கப்படுகிறது. இரண்டு க்ளவ்ட் சர்வர்கள் இணைந்து சேவைகளை, இரண்டு வகையினருக்கும் வழங்க முன்வரும்போதும், இதே பெயரில் அது அழைக்கப்படுகிறது. ஒருவர் தனக்கென ஒரு க்ளவ்ட் சர்வரை அமைத்துப் பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்களையும் பயன்படுத்த அனுமதித்தால், அது Hybrid Cloud என அழைக்கப்படும்.
3. சமுதாய க்ளவ்ட் (Community Cloud): தனிப்பட்ட க்ளவ்ட் சர்வர் ஒன்று, பல நிறுவனங்களால், பல தரப்பட்டவர்களால் பயன்படுத்தப்படும்போது, அது Community Cloud என அழைக்கப்படுகிறது. வேறு கோணத்தில் பார்க்கையில், ப்ரைவேட் க்ளவ்ட் பொதுவான ஒன்றாகவும் சேவை தரும் ஒரு அமைப்பாகக் கருதப்படும்.
சேவைகள் என்ற வகையில் இவை மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. தற்போது க்ளவ்ட் சேவைப் பணிகள் பலவாறாக மேற்கொள்ளப்படுவதால், இந்த பிரிவுகளும் பல வகைகளாகக் காட்டப்படுகின்றன. அவை,
1. அடிப்படைக் கட்டமைப்பு சேவை (Infrastructure- as -a -Service (IaaS): ஒரு க்ளவ்ட் சேவையில் சர்வர் ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங் அலைவரிசை அல்லது லோட் பேலன்சிங் போன்ற சேவைகள் வழங்கப்படுகையில், அது அடிப்படைக் கட்டமைப்பு சேவை என அழைக்கப்படுகிறது. அமேஸான் நிறுவனம் வழங்கும் இணைய தள சேவை இதற்கான ஓர் எடுத்துக் காட்டு.
2. சாப்ட்வேர் கட்டமைப்பு சேவை (PaaS = Platform- as -a -Service): ஒரு க்ளவ்ட் சர்வர், அதன் பயனாளர்களுக்கு சாப்ட்வேர் தொகுப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான சூழ்நிலையை, தேவையான மென்பொருட்களைத் தந்தால், அது ஓர் மேடைக் கட்டமைப்பினைத் தருவதற்கு ஒப்பாகும். இதனால், மென்பொருட்களைத் தயார் செய்பவர், அதற்குத் தேவையான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அமைப்புகளை வாங்கி, தங்களது கம்ப்யூட்டர்களில் அமைத்துப் பயன்படுத்த வேண்டியதில்லை. இதற்கான ஓர் எடுத்துக் காட்டு Force.com
3. சாப்ட்வேர் சேவை (Software-as-a-Service (SaaS): அப்ளிகேஷன்கள் மற்றும் புரோகிராம்களைத் தன்னகத்தே கொண்டு, அவற்றைத் தேவைப்படும் பயனாளர்கள் அணுகிப் பெற்றுப் பயன்படுத்தும் சேவையை வழங்கும் க்ளவ்ட் சேவை இந்தப் பிரிவில் வரும். Gmail, Basecamp, and Netflix ஆகியவை இதற்கான எடுத்துக் காட்டுகளாகும்.
க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பணிகளின் எதிர்காலம்:
மேலே சொல்லப்பட்ட க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிகள் மற்றும் எடுத்துக் காட்டுக்களையும் பார்க்கையில், வரும் எதிர்காலத்தில் இவை இல்லாமல் இயங்க முடியாது என்பது உறுதி. மொபைல் அப்ளிகேஷன்கள், தங்கள் பேக் அப் பைல்களை, க்ளவ்ட் ஸ்டோரேஜில் தான் வைத்துப் பாதுகாக்கின்றன.
ட்ராப் பாக்ஸ், கூகுள் ட்ரைவ் மற்றும் இது போன்ற க்ளவ்ட் சர்வர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். அமேஸான், யு ட்யூப் போன்றவை க்ளவ்ட் கட்டமைப்பு சேவைக்கு அடையாளங்களாகும். க்ளவ்ட் இல்லை என்றால், இன்றைக்கு நாம் அனைவரும்
பயன்படுத்தும் பாதிக்கு மேற்பட்ட இணைய அப்ளிகேஷன்களை இழக்க வேண்டியதிருக்கும். அப்படியானால், இவற்றின் எதிர்காலப் பணிகளும், அவற்றிற்கான இடங்களும் எப்படி இருக்கும்?
இதில் உள்ள அபாயம் என்ன? க்ளவ்ட் ஸ்டோரேஜ் பயனாளர் அனைவருக்கும், அதில் அவர்கள் சேவ் செய்துள்ள டேட்டாவிற்கு அணுக்கத்தினைத் தருகிறது. பயனாளர்களின் கம்ப்யூட்டர்களின் இயக்கம் முடங்கிப் போனாலும், வேறு கம்ப்யூட்டர்கள் அல்லது பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் இருந்து கூட இவற்றை இயக்கலாம். ஆனால், நாம் க்ளவ்ட் ஸ்டோரேஜ் சேவையைத் தரும் நிறுவனத்தை நம்பி, அனைத்து டேட்டாக்களையும் தருகிறோம். இது என்றைக்கும் அபாயம் தான் என்று பலரும் கருதுகின்றனர். இந்த அச்சத்தைப் போக்கும் வகையில், க்ளவ்ட் சர்வர்கள் புதிய தொழில் நுட்பத்தினை உருவாக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையைப் பின்பற்றுவார்கள்.
அனைத்துமே இணையமாய்:
இனி வருங்காலம், நமக்கு அனைத்துமே இணையம் தான் என்ற சூழ்நிலையை உருவாக்கும். நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும், கம்ப்யூட்டர் மட்டுமின்றி, டி.வி., மியூசிக் பாக்ஸ், மைக்ரோ ஓவன் அடுப்பு, ஏ.சி. மின் சாதனங்கள் என அனைத்தும் க்ளவ்ட் சர்வர்களுடன் இணைக்கப்பட்டு, நாம் எங்கு சென்றாலும், அவற்றை இயக்கும் வகையிலான ஒரு சூழ்நிலை கிடைத்தால் எப்படி இருக்கும்? எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
க்ளவ்ட் சர்வர்கள் நம்மைச் சுற்றி அமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து நாம் சேவைகளை மேற்கொள்வோம். இன்றைய தொலைபேசி இணைப்பகங்களைப் போல, நம் அருகிலேயே அவை அமைக்கப்படலாம். அதன் மூலம் நம் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகலாம். வாழ்க்கை தரம் உயரலாம்.
Cloud computing?
- Cloud : Inter connected computers in (N/W)
- Computing : IT services like software’s and hardware’s
- Provides you the infrastructure
- Linux computer ,windows computer, etc
- Running on different environment.
- Using software as a service instead of hardware as a service
- Platform as service
- For example windows + intel = wintel is a platform like provide you Dbserver,APP server,webserver
- Public cloud – Access through public internet.
- Private cloud -Cloud inside a private organization within four wall.
- Hybrid cloud -Combination of public and private cloud Private cloud interface with public cloud.
- community cloud -Private to private
- On demand self service
- Broad network access
- Resource pooling
- Rapid elasticity
- Measured dervice
Introduction in cloud computing
கருத்துரையிடுக Facebook Disqus