தமிழ்நாட்டின்
வளர்ச்சியை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் தொலைநோக்குத் திட்டம்
“விஷன் தமிழ்நாடு 2023”. போக்குவரத்து, விவசாயம், கல்வி, சுகாதாரம்
உள்ளிட்ட 11 துறைகளிலும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஆப்ஸ்
இந்தத்
திட்டத்தால் அதிகமாகப் பயனடைய விருக்கும் இளைஞர்களுக்காக அருண்தத்தன் என்ற
பொறியியல் மற்றும் சட்ட பட்டதாரி இளைஞர் விஷன் 2023 பற்றிய தகவல்களை
செல்போனில் காணும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனாக வெளியிட்டுள்ளார்.
இந்த
அப்ளிகேஷன் அனைத்துத் திட்டங்களையும் துறைவாரியாகப் பிரித்து, விரிவான
புள்ளிவிவரங்களுடன், படிப்பதற்கு எளிமையான முறையில் விளக்குகிறது.இவர்
விழுப்புரம் மாவட்டம், எய்யில் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த அப்ளிகேஷனை
“விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பற்றி இன்றைய இளைஞர்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அது இளைஞர்களைச்
சென்றடைவதற்காகவே செல்போனில் பார்க்கும்படியான இந்த அப்ளிகேஷனாக உருவாக்கி
யிருக்கிறேன்” என்கிறார் இவர்.
தனிநபர் வருமானம்
போனில்
விளையாடுவதற்கும் பாட்டு கேட்பதற்கும் அரட்டை அடிப்பதற்கும் நடுவே இந்த
நலத் திட்டத்தைப் பற்றியும் இளைஞர்கள் தெரிந்துகொள்ளலாம். விஷன் தமிழ்நாடு
2023 திட்டத்தைப் பொறுத்தவரை, அடுத்த 11 ஆண்டுகளில் இரண்டு கோடிப்
பேருக்குப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தனிநபர்
சாராசரி ஆண்டு வருமானத்தை
2023ல்
6 மடங்காக உயர்த்தி 4,50,000 ரூபாய் என்ற இலக்கை அடையத் திட்டம்
வகுக்கப்பட்டிருக்கிறது. “தற்போது ஆண்ட்ராய்ட் போன்களுக்கு உருவாக்கப்பட்ட
அப்பிளிகேஷனை விரைவில் விண்டோஸ், ஐ போன்களுக்கும் உருவாக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளேன்” என்கிறார் அருண்.
விஷன் தமிழ்நாடு 2023 பற்றிய சமீபத்திய செய்திகளையும், திட்டங்களின் தற்போதைய நிலவரங்களையும் இந்த அப்ளிகேஷனில் காணலாம்.
LINK; CLICK HERE
கருத்துரையிடுக Facebook Disqus