0
தெரிந்து கொள்ள வேண்டிய சீனாவின் சாலைப் போக்குவரத்து - படங்கள்-

usa and india traffic rules





நம்முடைய ஊரில் உள்ள அழைப்பூர்தி(கால் டாக்சி) களைப் போலவே சீன வாடகை ஊர்திகள்  இயங்குகின்றன. எனினும், நடுவழியில் பலரையும் ஏற்றிச் சென்று இறக்குகின்றனர். சீன அரசு, மிதிவண்டிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதன்மைச் சாலைகளில் மிதிவண்டிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. 

 






இது அமெரிக்காவில் உள்ள மிதிவண்டி பெறும் இடம்-தானியங்கி-




அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்குப் பதிவு செய்ய வேண்டும். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவ்வாறு பதிவு செய்து மிதிவண்டிகளில் செல்கின்றனர்.

இந்த முறை இன்று உலகின் பல நாடுகளிலும் செயல்படுகின்றன. புவிவெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இன்றைய பிரச்சனை காரணமாக பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து எரிபொருள் செலவை குறைக்க முடிகிறது.  

குளிர் குறைவான காலங்களில் பலரும் மிதி வண்டிகளை ஏற்றத்தாழ்வின்றி பயன்படுத்துகின்றனர்.மகிழுந்துகள் அதிகமாக சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டாலும் கூட மிதி வண்டிகள் பாவனை குறைவாக இருப்பதில்லை.
மிதிவண்டி -வாடகை வண்டி-டாக்ஸி-




சாலைகளில், மகிழுந்து செல்வதற்கான சாலையின் பரப்பே அதிகம். மிகக்குறைந்த அளவினரே, இரு சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். பேருந்து – வாடகையுந்து என பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களே அதிகமாக உள்ளனர்.







இதற்கு மிக முதன்மைக் காரணம், இவற்றில் காணப்படும் மிகக்குறைந்த கட்டணமாகும். நகரப் பேருந்துகளில், எங்கு ஏறி எங்கு இறங்க வேண்டுமென்றாலும் வெறும் 1 யுவான் (நம் ஊரில் 10 உரூபாய்) செலுத்தினால் போதும்.

பெரிய பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கும் நடத்துநர்கள் இல்லை. முன்பக்கம் ஏறும்போது, ஒவ்வொருவரும் 1 யுவான் பணத்தை, ஓட்டுநருக்கு வலப்பக்கத்தில் உள்ள உண்டியலில் போட்டுவிட வேண்டும். இறங்கும்போது, பேருந்தின் நடுப்பகுதி வழியே, கதவு திறக்கும்போது இறங்கிவிடலாம். ஆனால், சிறிய அளவில் காணப்படும் சிற்றுந்துகளில் நடத்துநர் பயணச்சீட்டு அளிக்கிறார்.

பேரூந்தில் சீட்டு வாங்க வரிசையில் காத்திருக்கும் பயணிகள்.


ஒவ்வொரு சாலையிலும் இரு வழித்தடங்கள் உள்ளன. ஒன்று போவதற்கு இன்னொன்று வருவதற்கு. ஒவ்வொரு வழித்தடத்திலும், இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்றைப் பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துகளும், மிதிவண்டி உள்ளிட்ட இருசக்கர வாகனத்திற்காகவும், இன்னொரு அகலமான பாதை மகிழுந்துகள், கனமிகு வாகனங்கள் செல்வதற்காகவும் என ஒதுக்கியுள்ளனர்.

பொறுமையுடன் ஏறக் காத்திருக்கும் மெட்றோ பயணிகள்.




தமிழகத்திலும், இது போன்ற ஏற்பாடுகள் சென்னை மாநகரில் செய்யப்பட்டாலும் கூட அதை யாரும் மதிப்பதில்லை. போக்குவரத்துக் காவல்துறையும் அதை கண்டு கொள்வதில்லை.இதனால் அதிக சாலை விபத்துகள் நடந்து வருகின்றன.

ஆனால், இங்கு மிகப்பெரும் அதிசயமாக எங்குமே போக்குவரத்துக் காவலர்களைக் காண முடியவில்லை. அதே நேரத்தில், சாலையை இரண்டாகப் பிரிக்கும் வகையில் வெறும் கோடு மட்டுமே வரைந்துள்ள போதும், அதை ஒருவர் கூட மீறுவதில்லை. நமது ஊரில், நடுவிலே சிறிய அளவில் தடுப்பு வைத்திருந்தால் கூட எதிர்த்திசையில் வேகமாகப் பயணிக்கும் வாகனங்களை நாம் காண முடியும். ஆனால், இங்கோ நிலை தலைகீழாக உள்ளது.

இதற்குக் காரணம், சீனக் காவல்துறையின் மீதுள்ள பயமா அல்லது போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என்ற மக்களின் பொறுப்புணர்ச்சியின் வெளிப்பாடா எனத் தெரியவில்லை.


பெரும் சாலைகளில் மிதிவண்டிகள் நிறுவனங்களால் நிறுத்தப்பட்டிருக்கும்.கடுங்குளிர் நிலவும் காரணத்தால் மக்கள், இயல்பாகவே இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதில்லை.
ஆங்காங்கு காணப்படும் இருசக்கர வாகனங்கள் கூட அந்தந்த பகுதியில் சில பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்பவையாகவே இருக்கின்றன.
மிதிவண்டி பகிர்வுத் திட்டம் என்பது பல பெரும் நகரங்களில் மிதிவண்டிகளை ஒரு குறுகிய காலத்துக்குப் பயன்படுத்தக் கூடியதற்கான ஒர் ஏற்பாடு ஆகும்.






மிதி வண்டிகள் பயனர்கள் பெரிதும் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும். ஒருவர் ஒரு தரிப்பிடத்தில் இருந்து எடுத்துச் சென்று, தான் செல்லும் இடத்தில் உள்ள பிறதொரு இடத்தில் நிறுத்தி விட்டுச் செல்ல முடியும். அதாவது மீண்டும் முன்னர் மிதிவண்டி எடுத்த இடத்திற்கு சென்று ஒப்படைக்க வேண்டியம் அவசியம் கிடையாது.  

சிறு கட்டணத்துக்கு இவ்வாறு மிதிவண்டிகளைப் பயன்படுத்த முடியும். தரிப்பிடத்தில் தானியங்கி இயந்திரத்தில் அதற்கான அனுமதியைப் பெற முடியும். பல நகரங்களில் இலாபகரமாக இத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



சீன அழைப்பூர்திகளைப் போலவே, இரு சக்கர வாகனங்களில் வேண்டிய இடத்திற்குக் கொண்டு சென்று விடுகின்ற சேவையும் இங்கு இயங்குகிறது.  இந்த இரு சக்கர வாகனங்களைப் பெரும்பாலும், அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என வேகமாகச் செல்ல விரும்புபவர்கள் ஓடிச்சென்று ஏறிப் பயன்படுத்துகின்றனர்.
அரசின் சொத்தை யார் வேண்டுமானாலும் சேதப்படுத்தலாம் என்ற நிலை இங்கு! அரசு சொத்தை யாருமே சேதப்படுத்தக்கூடாது என்ற மனநிலை அங்கு! இந்த மனநிலை, அரசால் பயிற்றுவிக்கப்பட்டதல்ல! தானே உருவானது. அரசியல் தலைமையின் மீதான அச்சத்திலிருந்தும், அதிகாரிகளின் கிடுக்கிப்பிடிக்கு பயந்தும் வருவது அல்ல! ஆனால், இங்கு நிலைமையோ தலைகீழ்!

ஆனாலும் நகர் வெளிப்புறங்களில் இப்படியும் இருக்கிறார்கள்.



தீயன அகற்றி நல்லவற்றை கற்றுக் கொள்வோம்.

கருத்துரையிடுக Disqus

 
Top