க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பல நிறுவனங்கள், நம் டேட்டாவினை, பைல்களை ஸ்டோர் செய்திட வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இலவசமாக இவற்றைப் பயன்படுத்துகையில், குறிப்பிட்ட அளவில் டேட்டாவினை நாம் ஸ்டோர் செய்திடலாம். எல்லை மீறுகையில், பைல்களை நீக்க வேண்டும். அல்லது கட்டணம் செலுத்தி கூடுதல் இடம் வாங்க வேண்டும். முக்கியமான பைல்களை நாம் அப்லோட் செய்திடுகையில், இந்த எச்சரிக்கை கிடைக்கப்பெற்று நாம் திண்டாடும் சூழ்நிலைகள் பலமுறை ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே அப்லோட் செய்த பைல்களை அழிக்க வேண்டும்; புதிய பெயரில் அக்கவுண்ட் திறக்க வேண்டும். அல்லது வேறு ஒரு நிறுவனத்தின் இலவச க்ளவ்ட் ஸ்டோரேஜ் முறைக்கு மாற வேண்டும்.
ஹைவ் ஸ்டோரேஜ் தளத்தில் நாம் பயன்படுத்தும் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்த முடியாது. 'shared folders' போல்டர்களிலிருந்து, இன்னொருவர் பைல்களை தரவிறக்கம் மட்டுமே செய்திடலாம். அவற்றை உங்களால் மட்டுமே நீக்க முடியும். ஹைவ் தளம் விளம்பரங்கள் தரும் உதவியில் இயங்குவதால், உங்கள் பைல்களை ஹைவ் காண்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளது. எனவே தனி நபர் சுதந்திரத்தில் இது தலையிடுவதாக உள்ளது என்று குற்றம் சொல்பவர்களுக்கு இது சரியாக வராது. எனவே, நம் ரகசிய தகவல்கள் அடங்கிய கோப்புகள் மற்றும் நம் அன்றாட அலுவலகப் பணிகள் சார்பான பைல்களை இதில் ஸ்டோர் செய்வது உகந்தது அல்ல.
ஹைவ் தளத்தின் ஸ்டோரேஜ் வசதியைப் பெற, அக்கவுண்ட் ஒன்று திறக்க வேண்டும். நம் மின் அஞ்சல் முகவரி அல்லது சமூக தளங்களின் பதிவு ஆகியவற்றைக் கொண்டு அக்கவுண்ட் திறக்கலாம். அக்கவுண்ட் திறந்தவுடன், உங்கள் ஹைவ் அக்கவுண்ட் காலியாக இருக்கும். இதனுடைய இண்டர்பேஸ் மிக அகலமாக இருப்பதால், உங்கள் பிரவுசரைச் சுருக்கி வைத்துப் பயன்படுத்த முடியாது.
மிக எளிதாக உங்கள் பைல்களை அப்லோட் செய்திடலாம். அப்லோட் முடிந்தவுடன், பைல்கள் Transfer என்னும் போல்டருக்குச் செல்கின்றன. இந்த போல்டரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் இதிலிருந்து பைல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.வீடியோ பைல்களை குழுவாக அப்லோட் செய்கையில், எந்த பைல் அதிக டேட்டா கொண்டுள்ளதோ, அதனை மட்டும் ஹைவ் அப்லோட் செய்கிறது. எத்தனை விடியோ பைல்களை அப்லோட் செய்திடலாம் என்பதற்கான வரையறையையும் தருகிறது.
இந்த தளத்தின் முகவரி; http://www.hive.im/
கருத்துரையிடுக Facebook Disqus