0
ஒரு போட்டியில் ஜப்பான் காரனும், இந்தியனும் கலந்துகொண்டார்கள்....

ஒரு லிட்டர் பெட்ரோலில் எவ்ளோ தூரம் போகிறோம்,என்பதுதான் போட்டி...


ஒரே கம்பெனியின் தயாரிப்பான இரண்டு பைக்குகள்...


முதலில் ஜப்பானியர் போட்டியை துவங்கினார்,
1லிட்டரில் 40 கி.மீ.சுற்றி வந்தார்,பெட்ரோல் தீர்ந்துவிட்டது..,


அடுத்து வந்த நம்மநாட்டுகாரன்,அதே 1 லிட்டரில் 40 கி.மீ வண்டி நின்றது. அப்பொழுதுதான் தனக்கு தெரிந்த வித்தையை காட்டினான், பெட்ரோல் டேங் மூடியை திறந்து வாயால் ஊதிவிட்டு....... 

ஸ்டார்ட் செய்தான். 2 கிமீ ஓடியது.

வண்டியை.தரையில் வழப்பக்கமா சரிச்சி போட்டு...... 


மீண்டும்,ஸ்டார்ட் செய்து 2கிமீ.ஓட்டினான்.

அப்புறம் இடப்பக்கம் சரிச்சு போட்டு.....


2 கிலோமீட்டர் ஓட்டினான்.

ஆகமொத்தம் போட்டில நம்மஆளு ஜெயிச்சிட்டான்..

ஜப்பான் காரன் சொன்னான், பைக்க கண்டுபிடிச்சது என்னமோ நாங்கதான், ஆனால் அதை எப்படிலாம் ஓட்ட வேண்டும் என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுகொள்ள வேண்டும்....

கருத்துரையிடுக Disqus

 
Top