0
ரு இடத்துக்கு அவசரமாக அதே நேரம் செலவு குறைவாகப் போக வேண்டும் என்றால் அது ஆட்டோ பயணம்தான்.  எவ்வளவு கேட்பார்களோ என்ற அச்சம் இருக்கும்.


ஆட்டோ டிரைவர்கள் ஓவ்வொருவரும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போக, ஒவ்வொரு கட்டணம் சொல்வார்கள். நமக்கு எது குறைவு, அதிகம் என்ற குழப்பம் வந்து விடும். இப்படியே விசாரித்துக் கொண்டிருந்தால் நேரம்தான் விரயம் ஆகும் என்று  வேறு வழி இல்லாமல், கேட்ட ரேட்டை கொடுத்துவிடுவோம்.


இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே, அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம், சொல்கிற இடத்துக்கு வரும் ஆட்டோ, அரை மணி நேரம் முன்பே நம் வீட்டு வாசலில் நிற்கும் ஆட்டோ... என இப்படி மக்களுக்கு உடனடியாக ஆட்டோ சேவை கிட்ட, கால் டாக்ஸிக்கு நிகராக 'ஜீ-ஆட்டோ' என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளார் குஜராத்தைச் சேர்ந்த நிர்மல் குமார். வயது  30.
தடைகளைத் தாண்டி வெற்றியைக் கண்ட இந்த ஜீ-ஆட்டோ (G-Auto) திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போமா...

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று அதிகம்பேர் புலம்புவதுண்டு. அதற்கு மாறாக எதையும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டி உள்ளார் நிர்மல் குமார். இவர் சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவர். ஆனாலும் மனோதைரியம், விடாமுயற்சியால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் (IIM) இல் MBA  பட்டப்படிப்பு முடித்தார். நல்ல சம்பளத்தில் வேலைகள் தேடி வந்தன.


அதையெல்லாம் உதறிவிட்டு சொந்த தொழில்தான் செய்யவேண்டும் என்று தீர்மானித்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு ஐடியா வந்தது. தான் படிக்கும் காலத்தில் ஐஐஎம் கேட்டில் இருந்து ஒரு ரெஸ்டாரெண்டுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோவில்தான் போகவேண்டும். 

அப்போது ஒவ்வொரு ஆட்டோ டிரைவரும் வெவ்வேறு கட்டணத்தைச் சொல்வார்கள். இதனை சரிசெய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு, கால் டாக்ஸிக்கு நிகராக ஆட்டோக்களையும் இயக்கினால் எப்படி இருக்கும் என்ற ஆலோசனையில் உருவானதுதான் 'ஜீ-ஆட்டோ' சேவை.




2009-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த  ஜீ-ஆட்டோவிற்கான  எண் 09274444444. இதற்கு  SMS  அல்லது பேசினால் போதும்... சிறிது நேரத்தில் 'ஆட்டோ எண் 7836, ஜீ-பைலெட் (ஆட்டோ டிரைவர்) பெயர் ராம்சிங் உங்களுக்கா ஏர்போர்ட் வாசலில் தயார் நிலையில் உள்ளது. ஆட்டோ சார்ஜ் 175 ரூபாய். ஹேவ் ஏ நைஸ் ஜர்னி. விசிட் www.g-auto.org யுவர்ஸ் ஜி-ஆட்டோ என்று நம் மொபைல் போனுக்கு மெசேஜ் வந்துவிடும். அகமதாபாத் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் நமக்காக அந்த ஆட்டோ ரெடியாக நின்றுகொண்டு இருக்கும்.

மக்கள் சுலபமாக தொடர்புகொள்ள மேற்கொண்ட எண்ணையும்,ஆன் லைனிலும் ஜீ-ஆட்டோக்களை புக் செய்துகொள்ளலாம்.  முதலில் IIM வளாகத்தில் உள்ள 12 ஆட்டோ டிரைவர்களிடம் பேசி , ஆன் லைன் ஆட்டோ புக்கிங் சேவையைத் தொடங்கினார். தற்போது ஜீ-ஆட்டோ கிளப்பில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் பிஸியாக உள்ளது. எந்த ஒரு ஆட்டோவும் நிர்மல் குமாருக்கு சொந்தமானது கிடையாது. ஒவ்வொரு ஆட்டோவையும் புக் செய்யும் போது 15 ரூபாய் சேவை கட்டணமாக வாசூலிக்கிறார். இந்த ஆட்டோக்களில் விளம்பரங்களை வைப்பதற்கும் இவர் ஏற்பாடு செய்து, இதற்கான சேவை தொகையையும் பெறுகிறார். இதுதான் நிர்மல் குமாரின் பிசினஸ் சூட்சமம்.



ஜீ-ஆட்டோ கிளப்பில் சேருவதற்கு சில நிபந்தனைகள் உண்டு.  ஜி பைலெட்கள் (ஆட்டோ டிரைவர்கள்)  அரசாங்கம் தீர்மானித்த கட்டணம்தான் வசூலிக்கவேண்டும், டிஜிட்டல் மீட்டர் பொருத்தபட்டிருக்கவேண்டும்.  பயணிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்ளக்கூடாது. இதனை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். திரும்ப திரும்ப தவறுகள் செய்தால் ஜீ-ஆட்டோ குரூப்பில் இருந்து நீக்கப்படுவார்.

'இந்த திட்டத்தால் மற்ற ஆட்டோக்காரர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வந்திருக்குமே' என்று நீங்கள் நினைக்கலாம். ஆம். முதலில் எந்த ஆட்டோ டிரைவரும் முன் வரவில்லை. ஆட்டோ சங்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஒன்றிரண்டு ஆட்டோ டிரைவர்கள் ஒப்புக் கொண்டதும், மற்ற ஆட்டோக்காரர்கள் நிர்மல் குமாரை அடிக்கவே வந்துவிட்டார்கள்.


மீடியா, அரசாங்கம் உதவியோடு இந்த திட்டத்தை தொடங்கினார் நிர்மல் குமார். இதில் ஆட்டோ டிரைவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கவே, கடகடவென ஜி-ஆட்டோ திட்டத்தில் சேர ஆரம்பித்தார்கள். நிர்மல் குமாரின் திட்டத்தைப் பார்த்து குஜராத்தின் முதல்வராக இருந்து நரேந்திர மோடியே பாராட்டி உள்ளார்.
இந்த ஜீ-ஆட்டோ திட்டத்தை சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களிலும் கொண்டுவர முயற்சி செய்துவருகிறார் நிர்மல் குமார்.


வெல்கம் ஜீ - ஆட்டோ!

Action For India's (AFI) mission is to help social innovators in India overcome barriers to scale and achieve greater impact at the Bottom of the Pyramid (BoP). We believe in the pivotal role that technology plays in scaling market-based solutions, and we work to connect social innovators in India with impact investors, mentors, and technology experts worldwide. Launched in 2012, AFI is inspired and guided by Sam Pitroda, Adviser to the Prime Minister of India and Chairman of the National Innovation Council of India. AFI is headquartered in New Delhi, India and has a chapter in Silicon Valley, California.

AFI Forum 2013 is the second edition of an annual gathering of social innovators, business leaders and impact investors. Forum 2013 was held on the 19-20th of January at the Om Shantri Retreat Center, Manesar and IIT, Delhi. 

கருத்துரையிடுக Disqus

 
Top