வாஷிங்டனில் மனித வயிற்றை செயற்கையாக ஸ்டெம்செல்கள் மூலம் விஞ்ஞானிகள் உருவாக்கும் முயற்சியில் உள்ளனர். ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இதற்கு ‘3டி வயிறு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பெட்ரி டிஷ் என்ற தட்டில் ஸ்டெம் செல்கள் மூலம் இந்த வயிறு உருவாக்கப்பட்டு வருகிறது. பட்டாணி வடிவத்தில் உருவாகத் தொடங்கிய வயிறு, இப்போது கால்பந்து அளவு வளர்ந்திருக்கிறதாம். நிஜ வயிற்றைப் போலவே உள்ளே வெற்றிடம், சுரப்பிகள் கொண்ட உள்தசை மடிப்பு என்று உருவாகி வருகிறதாம்.
சின்சினாட்டி ஆராய்ச்சியாளர்களும் சின்சினாட்டி மருத்துவக் கல்லூரிப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ‘ஹெச் பைலோரி’ என்ற பாக்டீரியாதான் அல்சர், வயிற்றுப் புற்றுநோய் போன்றவை ஏற்பட முக்கியக் காரணம். அதனால், செயற்கை வயிற்றை ஹெச் பைலோரி பாதிப்பு ஏற்படாத வண்ணம் உருவாக்க உள்ளனர். எடை காரணமாக வரும் நீரிழிவு போன்ற மற்ற பிரச்னைகளை தவிர்க்கவும் இந்த வயிறு பயன்படும். மருத்துவ அறிவியல் வரலாற்றில் முதல்முறையாக நடக்கும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் நுரையீரல், கணையம் போன்ற மற்ற உறுப்புகளையும் ஸ்டெம் செல்கள் மூலம் தயாரிக்கப் போகிறார்களாம்!
கருத்துரையிடுக Facebook Disqus