ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.
உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..
“தரவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்..”
ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா…சோம்பேறி.
அவராலே செய்யமுடியலேன்னா…..” நேரம் இல்லே..”
எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா…” முட்டாள்தனம்”
அவர் பண்ணினா..” அவரும் மனுஷந்தானே..கடவுளா..?”
நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்”
அவர் செஞ்சா..” முன்னுதாரணம்”
நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா..”பிடிவாதம்”
அவர் அப்படி நெனைச்சா…” கொள்கையில் உறுதி..”
நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா..” காக்கா பிடிக்கறீங்க.”
அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா..” ஒத்துழைப்பு..பணிவு”
நீங்க அலுவலக நேரத்திலே வெளியே இருந்தா..” ஊர் சுத்தறீங்க”
அவர் இருந்தா.. ” பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கறார் ''
நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவு போட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க”
அவர் லீவு போட்டா..ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்..”
என்ன உலகமடா சாமீ இது..?
கருத்துரையிடுக Facebook Disqus