எந்நேரமும் மொபைல்
சார்ஜ் ஃபுல்லாக இருக்க வேண்டும் என இன்றைய மொபைல் பயனாளர்கள் அனைவரும்
எதிர்பார்க்கும் விஷயமாக மாறிவிட்டது இப்பிரச்னை.
இன்றைய இளையதலைமுறைக்கு பெரும் பயமாகவும் அலறலாகவும் இருப்பது "பேட்டரி லோ" என்னும் பிரச்னைதான் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துபவர்கள் கூறும் பெரும் பிரச்னையே பேட்டரி பேக்-அப் தான்.
ஆம், காலேஜ் செல்லும் முன் போடப்படும் சார்ஜ் மாலை வீடு திரும்பும் வரை இருக்க வேண்டும் என இளசுகள் மட்டுமின்றி அனைவரும் எதிர் பார்க்கும் விஷயம்.
இன்றைய யுகத்தில் அனைவரும் இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாகச் சேட் செய்வதாலும், 3ஜி இணைப்பை பயன்படுத்துவதாலும் அனைவரது போன்களும் மாலை வேளையில் 'பேட்டரி லோ' எனக் கதற ஆரம்பித்து விடுகிறது.
"அதிக நேரம் சார்ஜ் நிக்கணும்" -ஸ்மார்ட் போன்களில் நாம் எதிர்பார்க்கக் கூடிய ஒரு முக்கிய அம்சம் இதுதான். இனிமேல் அந்தப் பயமோ கஷ்டமோ தேவையில்லை.
இனிமேல் இந்த கருவி இருந்தாலே போதும் எப்போது வேண்டுமானாலும் எங்கேயும் சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். பார்ப்பதற்குக் கீ செயின் போலவே இருக்கும் இந்த "ஃபெயில் சேஃப் சார்ஜர்".
இந்தக் கருவியை சுலபமாக எங்கும் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். மிகவும் சிறியதாக இருக்கும் இந்த ஃபெயில் சேஃப் சார்ஜர் 4.5 செ.மீ மட்டுமே நீளம் கொண்டது. அதனால் எடுத்து செல்வது மிகவும் எளிது. கீ செய்ன் ஆகக்கூட இதனை கோர்த்துக் கொள்ளலாம்.
உடனே பவர் பேங்க் என நினைத்து விட வேண்டாம். பவர் பேங்க் மிகவும் பெரிதாகவும் விலையுயர்ந்தாகவும் இருக்கும். ஆனால், இந்த ஃபெயில் சேஃப் சார்ஜர் அப்படியல்ல!
இந்த ஃபெயில் சேஃப் சார்ஜருடன் ஒரு சாதாரண ஒன்பது வோல்ட் பேட்டரியைப் பொருத்தி, செல்போனைப் யூஎஸ்பி கேபிள் மூலம் இணைத்தால் போதும். இதன் மூலம் போனை எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
பிளான் வி சார்ஜர் என்றும் இது செல்லமாக அழைக்கப்படுகிறது.
பிளிண்ட்டூ என்ற நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது. இதன் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

கருத்துரையிடுக Facebook Disqus