இந்த
சேவை மூலம் கூகில் பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து மற்ற எந்த
நகரங்களுக்கும் பயணிப்பதற்கான விமான சேவையை அடையாளம் காட்டுகிறது. பிளைட்
சர்ச் பக்கத்திலேயே பயனாளிகளின் இருப்பிடம் ( உதாரணம் சென்னை) என
சுட்டிக்காட்டப்படுகிறது. அருகே உள்ள இடத்தில் பயண இடத்தை டைப் செய்தால்
அந்த நகருக்கான விமான சேவைகளை பட்டியலிடுகிறது. பயண நாளையும் குறிப்பிட்டு
தேடலாம். சுற்றி வளைத்து போகாமல் நேராக செல்லும் விமானங்களையே முதலில்
பட்டியலிடுகிறது. தேவை எனில் விரிவாக்கி கொள்ளலாம். அதில் கட்டணம் அதிகம்
உள்ள சொகுசு சேவைகளும் இடம்பெற்றிருக்கும்.
தேடியந்திரம்
தரும் சேவை அல்லவா, பயண நாள், விமான சேவை நிறுவனம், கட்டண அளவு, அருகில்
உள்ள நகரங்களுக்கு செல்லும் வசதி என பல அம்சங்களை குறிப்பிட்டு தேடும்
வசதியும் இருக்கிறது. மிக எளிதான ஆனால் விரிவான தேடல் வசதி. பயணங்களை
திட்டமிடுபவர்களுக்கு உதவும்.
இந்த
தேடல் வசதியின் இன்னொரு சிறப்பம்சம் அனைத்து விமான சேவைகளையும்
வரைப்படத்தின் மீது பொருத்தி காட்டுவது தான். இதன் மூலம் காட்சிரீதியாக
எந்த நகரங்களுக்கு எல்லாம் விமானங்கள் இருக்கின்றன என பார்த்து கொள்ள
முடிவதுடன் அந்த நகரங்களில் இருந்து வேறு எந்த நகரங்களுக்கு செல்லலாம்
என்று திட்டமிட்டு கொள்ளலாம்.
இது தவிர இந்திய நகரங்கள் பற்றிய விவரங்களை கூகிளே பரிந்துரை செய்கிறது.
பல பயண தளங்கள் விமான தேடல் சேவையை வழங்கி வரும் நிலையில் கூகிளே இந்த தேடல் வசதியை நேரிடையாக வழங்கத் துவங்கியுள்ளது.
ஏற்கனவே கூகிள், நகரங்களில் ஹோட்டல்களை தேடுவதற்கான வசதியை அளிப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக Facebook Disqus