ஆரியா வழியைப் பின்பற்றிய......மாணவனுக்கு சிறை.
ஒரு சினிமாவில் கணினி மானவனாக நடித்த ஆரியா, மாணவியின் -டாப்சி- மதிப்பெண்களை மாற்றி சித்தியடைய வைத்த கதை உங்களுக்குத் தெரியும்.
இப்படியான ஊடுருவலை ஒன்றை நடத்தி மாட்டிக் கொண்ட நியூயோர்க் மாணவன் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளார். தனது மதிப்பெண்களை மாற்றிய அவர், 5 இல் இருந்து 1 க்கு மாற்றியிருந்தார்.
இதைவிட இன்னொரு ஊடுருவலைப்- hacking-பற்றிய செய்தி...........
கணினியில் இருந்து தட்டச்சுச் செய்யும் போது அதில் இருந்து வெளிவரும் ஒலியை-சிக்னல்களைப் பயன்படுத்தி கக்கிங்க் செய்ய முடியும் என்பது தான். கணினி Off line இல் கூட இப்படிக் ஹக்கிங்க் செய்ய முடியும். மடிக்கணினியில் இருந்து வெளிப்படும் ஒலி சமிக்கையில் இருந்து ஊடுருவல் நடத்த முடியும். முக்கியமாக இண்டர்னெட் கபேயைப் பயன்படுத்துபவர்கள்,WiFi ஐ மடிக்கணினியில் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படல் வேண்டும்.
இதைவிட இன்னொரு செய்தி............
கைரேகையை பாஸ்வேட்டாகப் பயன்படுத்திய கணினியில், தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர் ஊடுருவல் நடத்தும் hacker கள். கைரேகையைக் கூட ஹக் செய்ய முடியும் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளனர் ஹக்கர்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus