0
நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாகிய வண்ணம்-paint-  Ultra-Ever Dry என்ற வண்ணக் கலவை -hydrophobic paint- ஆகும். இது பொதுவாக கப்பல் கட்டும் போது பாவிக்கப்படுகிறது. இந்த வண்ணத்தை பூசிக் கொண்டால் அது காயாமல் எப்போதும் இருப்பதுடன், அந்த வண்ணத்தின் மீது வீசப்படும் எந்தத் திரவத்தையும் திரும்ப வீசி விடுகிறது. அதாவது அந்த வண்ணம் பூசப்பட்ட பொருளில் ஏதாவது திரவம் வீசப்பட்டால் அது திரும்ப வீசிய பக்கமே வீசப்படும்.அதனால் தான் கப்பல் கட்டும் போது இந்த வண்ணத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

சில குடியிருப்பு வாசிகளுக்கு வெளிச் சுவரில் சிறுநீர் கழிப்பவர்களால் உபத்திரவம் ஏற்பட்டது. அருகில் உள்ள குடிபானக் கடையில் குடித்து விட்டு வருவோர் அந்த குடியிருப்புகளின் வெளிச் சுவரில் சிறுநீர் கழித்து விடுகிறார்கள். எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் பயன்படாத நிலையில் தற்போது இந்த வண்ண முறையைப் பயன்படுத்தி உள்ளார்கள்.


                                                              

சிறுநீர் கழிக்கும் போது அவர்களை நோக்கி சிறுநீர் வீசப்பட்டு உடை காலணிகளில் அவர்களின் சிறுநீரே வீசப்படுகிறது . அதனால் அவர்கள் தொல்லை இல்லாமல் தற்போது தங்கள் சுவர் நன்றாக சுத்தமாக வைத்து இருப்பதாகச் சொல்கிறார்கள் அந்த வீட்டுச் சொந்தக்காரர்கள்.
நம் நாட்டு குடிமகன்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க இந்த முறை பயன்படுமா?

கருத்துரையிடுக Disqus

 
Top