சின்ன
பெட்டி போல இருக்கும் வொண்டர்கியூப் (WonderCube ) பலவிதப் பயன்பாடுகளைக்
கொண்டிருக்கிறது. இந்தக் கன சதுர சாதனத்தை எந்தப் பக்கம் பிரித்தாலும் ஒரு
பயன்பாடு இருக்கிறது. ஒரு பக்கத்தில் கேபிள் இணைப்பு வசதி இருப்பதால்,
லேப்டாப் போன்ற சாதனங்களுடன் இணைக்கலாம். கோப்புகளை பேக் அப் எடுக்கலாம்.
இதே முறையில் போனை சார்ஜ் செய்யலாம். ஸ்மார்ட் போனில் வீடியோ அல்லது
புகைப்படம் பார்க்க விரும்பினால், இதை ஸ்டாண்டாகப் பயன்படுத்தலாம்.
யு.எஸ்.பி. சாதனமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மெமரி கார்டையும் இதில்
பொருத்திக்கொள்ளலாம். இருளில் டார்ச்சாகவும் செயல்படும்.
ஒன்பது
வோல்ட் பேட்டரியை இணைத்து அவசரகால சார்ஜராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எட்டுவிதமான மொபைல் பயன்பாடுகள் இதில் உள்ளன. இணைய நிதி திரட்டும் மேடையான
இண்டி கோகோவில் அறிமுகமாகியிருக்கிறது இந்த வொண்டர்கியூப். முயற்சியை ஆதரிக்க விரும்பு கிறவர்கள் முன்பதிவு செய்துகொண்டால் 40 டாலருக்கு இந்தச் சாதனம் அனுப்பி வைக்கப்படுமாம்!.
கருத்துரையிடுக Facebook Disqus