0
                                                           hello_2375705f.jpg
கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பு அம்சம்.

உலக அளவில் மொத்தம் 82 மொழிகளில் மெசேஜ்களை கைப்பட எழுதி அனுப்பக் கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் செல்போன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

மிகத் தொன்மையான மாண்ட்ரின் மொழியும் இந்த அப்ளிக்கேஷனில் இடம்பெற்றுள்ளது. தவிர, இதில் கை விரல்களால் வரைந்தும் மெசேஜ்களை அனுப்ப முடியும்.

ப்ளே ஸ்டோரில் கூகுள் கையெழுத்து உள்ளீடு அப்ளிக்கேஷனை ஆண்ட்ராய்ட் பயனாளிகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
தரவிறக்கம் செய்தவுடன் வாட்ஸ் ஆப் அல்லது மற்ற மெசேஜிங் அப்ளிக்கேஷன்களில் விரலால் எழுதி அனுப்பும் கீ பேடை செயல்படுத்த முடியும்.

கூகுள் நிறுவனத்தின் அடுத்த சாதனை ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கான தொட்டச்சு செயலி தான்.


தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 82 மொழிகளை ஆண்ட்ராய்டு ஃபோனில் நம் கையாலேயே எழுதுவதன் மூலம் அப்படியே அது எழுத்துருவாக மாறும் வசதியினை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஆங்கிலமும், தமிழும் தேவை என்றால் அந்தச் செயலியை தரவிறக்கியவுடன் வேறு எந்த மொழி தேவை என்று கேட்கும் இடத்தில் ‘தமிழ்’ என்பதைத் தேர்ந்தெடுத்தால், தமிழ் மொழியும் இணைந்து விடும். அதன் பிறகு Settings சென்று Language & Input ஆப்ஷனில் கூகுள் இன்புட் டூல் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
 




எழுத்துக்களை ஸடைலஸ் எனப்படும் எழுத்தாணியுடனும் அல்லது வெறும் விரல்களாலும் எழுத முடியும்.

Download from Google app store 
Google Handwriting Input

கருத்துரையிடுக Disqus

 
Top