0
வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும். இங்கு முக்கியமான மூலைகளான ஈசான மூலை, அக்னி மூலை, குபேர மூலை, நிருதி ஆகிய மூலைகளில் இருக்கவேண்டிய, இருக்கக்கூடாத பொருட்களைப்பற்றிப் பார்ப்போம்.

1. ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும்.
2. ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம்.

3. ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது.

4. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது.

5. பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக்கூடாது.

6. வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும்.7. அக்னி மூலை- தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும்.

8. வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை,எரிவாயு,போன்றவை) இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம்.

9. அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது.

10. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி,(செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது.

11. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.

12. செல்வம் தங்கவும், பணவிருத்திக்கும் குபேர (வடக்கு)மூலை, நிருதி தென்மேற்கு)மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும்,

13. சுவற்றில் பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும். 
 
14.வீதியைப்பார்த்துத் தான் வாயிற்படியை அமைக்க முடியும், எனவே, தெற்கு, மேற்கு வாயிற்படிகள் தவிர்க்க முடியாதவைகளே, தெற்கு, மேற்கு திசையில் தலைவாயில் 
 
அமைக்கும்படி நேரினும், ஈசானமூலை, அக்னிமூலையை சரியாக அமைத்துக் கொண்டால் போதும். தெற்கு, மேற்கு தலைவாயில் அமைந்த வீட்டின் கொல்லைப்புறமாக ஈசான, 
அக்னி மூலைகள் அமைவதை கவனிக்கவும்.

15. கழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும்.
நிருதியில் (தென்மேற்கில்) படுக்கையறையைில் அட்டாச்டு பாத்ரூம் வேண்டின் அந்த அறையின் தென்மேற்கு மூலையில் அமைக்கவும், 
கழிவுத்தொட்டி கண்டிப்பாக வீட்டின் வடமேற்கில் தான் இருக்க வேண்டும்.
16. சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில் கழிப்பறை அமைக்கலாம். 
17. பொதுவாக வீட்டில் எந்த இடங்களில் எடைமிக்க பொருட்களை வைக்கலாம் என்பதை கீழ்காணும் படத்தைப்பார்த்து அறிந்து கொள்க.
vasdu,vasdu yanthram,வாஸ்துசாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், வாஸ்து,ஜோதிடம்,மனையடி,புதுவீடு,கிரகப்பிரவேசம்,வீட்டுமனை
வாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற்குவாசல் படி இருப்பின். கொல்லைப்புறம் வடகிழக்கு, தென்கிழக்காக அமைந்து ஈசாநமூலையும், அக்னி மூலையும் பலம் இழக்க பழுதுபட நேரிடும், புதிதாக வீடுகட்டத்துவங்குபவர்கள் கீழ்வரும் படத்தைக்கொண்டு தலாவாசல்படி அமைப்புது நலம்பயப்பதாய் அமையும்.

கிழக்குத்தலைவாசல் வைக்க 11,12,13, பாகங்களைப்பயன்படுத்தலாம்
வடக்குத்தலைவாசல் வைக்க 3,4,5,6 பாகங்களைப்பயன்படுத்தலாம்.
தெற்கு தலைவசலுக்கு 23,22,21, பாகங்களைப்பயன்படுத்தலாம்.
மேற்கு தலைவசலுக்கு 31,32,34,35, பாகங்களைப்பயந்படுத்தலாம்.
மனையடிப்படி, அறைகளின் அறைகளின் உட்கூடுஅளவுகளில் 7,9,12,13,14,15, கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும். முழுமையான அளவுகளில் உட்கூடு அமைவுது அவசியம், இடம் வீணாகக்கூடது என 8.5,7.5,10.5 போன்ற அளவுகளைத்தவிரக்கவும். மாடிப்படிகளுக்கு அடியில் இடத்தைப்பொருத்து சாமான் வைப்பறை வைக்கலாம். மாடிப்படிக்கட்டுக்கள் வடக்கு, வடகிழக்கு,தென்கிழக்கு, கிழக்கு பக்கங்களை அடைக்கும் படிக்கட்டக்கூடாது. தெர்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும்படி மாடிப்படிக்கட்டுக்களை அமைத்தல் நலம்.
தொழில் நிறுவனங்கள், கடைக்களுக்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி இயல்பானது,தொழிற்சாலைகள் முதல் ஒரு சிறிய கடை வரை வாஸ்துபடி அமையின் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அனுபவப்பூர்வமாக கண்டுஉள்ளோம், அலுவலகத்தில் எந்த தைசையில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை எதிர் நோக்க வேண்டும், நாம் எந்த திசையில் அமர வேண்டும் என்று பார்ப்போம்.
வாடிக்கையாளர்கள் உள்நூழையும் போது அவர்களுக்கு முதுகைக்காட்டியபடி அமரக்கூடாது, அடுத்து அவர்கள் வடக்கில் அமர்ந்து நாம் தெற்கே அமரக்கூடாது,
தென்மேற்கில் அமர்ந்து கிழக்கு நோக்கி இருக்கலாம், வடக்கில் இருந்து கிழக்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை, தெற்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கலாம். நமக்குப்பின் நம் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு தாராளமாக வைக்கலாம். நமக்குப்பின்னே அழகிய இயற்கைக்காட்சிகள், மலைகள், ஓடும் குதிரை படங்களை வைக்கலாம், நம் அலவலகத்தின் வடகிழக்கு முலையில் தண்ணீர்விட்டு அதில் மலர்களைப்போட்டு வைக்கலாம், மணிக்கொடி போன்ற நிழலில் வளரும் செடிகளை வைக்கலாம். பணப்பெட்டி அல்லது பீரோ தென்மேற்கில் இருப்பது மிக நல்லது. கல்லாப்பெட்டியை கைக்குலாவகமாக வைத்துக்கொண்டு தென்மேற்கில் பீரோவைத்து பயன் படுத்தலாம், தெந்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கில் பீரோ வைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
வாஸ்து குறைகளைப்போக்கும் சிறுபரிகாரங்கள்.
ஈசான மூலையில் ( வடகிழக்கு) சிறிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வைத்தல்.
வண்ண மீன்தொட்டி வைத்தல். பசுமையான செடிகளை வளர்த்தல் (மணிக்கொடி போன்றவை)
மஞ்சள் குழைத்து வீட்டுக்கதவு சன்னலில் சுவஸ்திக், ஓம், சூலம் போன்ற குறிகளை இடல்,
மாவிலைத்தோரணம் கட்டல். அவ்வப்போது பஞ்சகவ்யத்தை (பசுவின்பால், தயிர், நெய், சாணம் ,கோமயம் ஆகியவற்றின் கலவை) வீட்டைச்சுற்றியும், உள்ளேயும் தெளித்து விடல்.
இனிமையாக ஒலிக்கும் "வின்ட்செம்"களை வீட்டினுள் கட்டிவிடுதல். பிரமிடுகளை வைத்தல். பகுவாகண்ணாடியை வீட்டின் தலைவாயிற்படியின் மேல் மாட்டிவிடல். தகுந்த மூலைகளில் தக்க பொருட்களை மட்டும் வைத்தல். வாஸ்து பரிகார யந்திரத்தை பிரதிஷ்டை செய்தல்.
வாஸ்து ஒரு அறிமுகம்:
வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்

வாஸ்து புருஷ மண்டலம்
கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.
முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு இந்திரனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, நிருதி(ராட்சசன்) ஆகியோர் அதிபதிகள்

கருத்துரையிடுக Disqus

 
Top