தன் மனைவியிடம் பல விஷயங்களை ஆண்கள்
விரும்புவார்கள் அல்லது எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் அவற்றை பெண்களிடம்
வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.
ஏன்? பயமாக இருக்குமோ? தயக்கமாக இருக்குமோ? சங்கடமாக இருக்குமோ? அல்லது
அலட்சியமாக இருக்குமோ? பெண்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை சொல்லத்
தேவையில்லை என்று தான் ஆண்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் சொல்லாமலேயே பெண்கள் தெரிந்து கொள்வார்கள் என்பதில்
அவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. பெரும்பாலும் இது உண்மை தான்.
தன்னுடைய ஆண் துணையின் மனமறிந்து அல்லது குறிப்பறிந்து நடந்து கொள்வதில்
பெண்கள் கில்லாடிகள் தான் என்பதில் சந்தேகமில்லை.
கருத்துரையிடுக Facebook Disqus