0

9HvbPnZ.jpg

ரு படம் உருவாவது ஒரு தவம் போல். நடிகர்கள், இயக்குநர், தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரும் பசி , தூக்கம், குடும்பம் என மறந்து வேலை செய்வார்கள். அதே போல் படம் முடிந்து எடிட்டிங், டிரெய்லர் கட், டீஸர் கட், இசை வெளியீடு என என்னென்னமோ இருப்பினும் ஒவ்வொரு இயக்குநருக்கும் மிகப்பெரிய கண்டம் சென்சார். எந்த சீனை எடுக்கச் சொல்வார்களோ, அல்லது ஏ, சர்டிபிகேட் கொடுத்து விடுவார்களோ என சென்சாராகி வரும்வரை ஒரு பிரளயம் தான் .

அந்த அளவிற்கு சென்சார் ஒரு படத்தின் தலையெழுத்தையே மாற்றி விடும். இந்த சென்சார் எதற்கு என நமக்கெல்லாம் ஒரு நேரத்தில் கேள்விகள் கூட எழலாம். மக்கள் பொழுதுபோக்கவே படம். அவர்களை நல்ல பாதையில் கொண்டு செல்லாவிட்டாலும் கெட்ட பாதையில் கொண்டு சென்று விடக்கூடாது என்பதே அரசின் நோக்கம், ஏன் ’அக்னிபாத்’   படத்தை பார்த்து தான் கொலையே செய்தேன் என ஒரு மாணவன் தன் ஆசிரியரைக் கொன்றதற்கு காரணம் சொன்னது நாமறிந்ததே.


Wux1ide.jpg

எனவே தான் ஒவ்வொரு படத்துக்கும் சென்சார் மிக முக்கியம், அதே போல் சென்சார் சர்டிபிகேட்டுகளும் படத்தின் கரு காட்சிகளை பொருத்து மாறுபடும். நமக்கு தெரிந்து மொத்தம் மூன்று சர்டிபிகேட்டுகள். U, A, UA. ஆனால் இவை தவிர்த்து S என்ற சான்றும் உள்ளது. மேலும் V/U, V/A,V/UA, V/S  சான்றுகளும் உள்ளன.


U- Unrestricted 

பொதுவாக அனைத்து வயதினருக்குமான படம். படத்தில் வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் என எதுவுமின்றி குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமென்பதே U சான்று.


UA- Unrestricted with Parental Guidance. 

இதை அமெரிக்கா போன்ற நாடுகளில் PG எனக் கூறுவதுண்டு. இந்த படம் அனைத்து தரப்பினரும் பார்க்கலாம். ஆனால் 18 வயதிற்கு கீழ் உள்ளோர் பெற்றொருடன் காண வேண்டும் என்பதையே UA குறிக்கும்.


A - Restricted to Adults 

கண்டிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ளோர் பார்க்கக் கூடாது. A கொடுத்துவிட்டால் அந்த படத்தில் அதீத வன்முறைக் காட்சிகள், ஆபாசக் காட்சிகளிருக்கும் என பொருள்.


S - Restricted to a Special Class 

இப்படி சான்றுகள் கொடுக்கப்பட்ட படங்களை அனைவராலும் காண முடியாது. இந்த படங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே எனப் பொருள். அதாவது மருத்துவம் சார்ந்த அதே சமயம் வன்முறைகளோ அல்லது அதீத ரத்தம் தோய்ந்த விஷயங்களோ இருப்பின் அவை மருத்துவர்கள் மட்டுமே காணலாம் என கூறி பிரத்யேக காப்பிகள் அவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் இந்த படங்களே S சான்று பெற்ற படங்கள்.

nKimvw5.jpg

இவை மட்டுமின்றி V/U, V/A, V/UA - இவைகள் வீடியோக்களுக்கு கொடுக்கப்படும் சான்று. அதாவது டிவிகளில் ஒளிபரப்படும் படங்கள் காட்சிகள், பாடல்களுக்கு தனி சென்சார் உண்டு. எடுத்துக்காட்டுக்கு : ’சலீம்’ படத்தின் ‘மஸ்காரா’ பாடலின் போது அந்த குறிப்பிட்ட பெண்ணின் நடனத்தின் போது ஒரு அனிமேஷன் பொம்மை நடனம் ஆடும், அல்லது பாட்டு வரிகள் போடப்படும். அதே பாடல் தியேட்டரில் வருகையில் பொம்மை, பாடல் வரிகள் இன்றியே போடப்பட்டது. காரணம் டிவிக்கான சென்சாரில் சில மறைக்கப்பட்ட காட்சிகளுடன் பாடல் வெளியானதே காரணம்.

ஒவ்வொரு படத்திற்கும் சென்சார் மிக முக்கியம். மேலும் நமக்கான பொழுதுபோக்கு நேரங்களில் ஆதித இடங்களை பிடித்துக்கொண்ட சினிமா துறையினரைப் பொருத்தமட்டில் இந்த சென்சார் சான்று வாங்குவது ஒரு தாயின் பிரசவம் போல் என்று கூட சொல்லலாம். எனினும்  போர்க்களத்தையே கதைக்களமாகக் கொண்டு உருவாக்கும் படங்களை எடுத்தாலும் ஒவ்வொரு இயக்குநரும் எதிர்பார்க்கும் சான்று U. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் U கிடைத்தால் வரி விலக்குக் கிடைக்கும் என்பதே இதற்கு முதல் காரணம். அப்படி U வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் ‘காக்கா முட்டை’, '36 வயதினிலே’ ’பாபநாசம்’ போன்ற நல்ல படங்கள் கொடுத்தால் கண்டிப்பாக U சர்டிபிகேட் உறுதி.  மக்களும் இதுபோன்ற படங்களை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பது இந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளிலேயே தெரிகிறது.

கருத்துரையிடுக Disqus

 
Top