இந்த வருட ஆஸ்கர் பரிந்துரை வரிசையில் இடம்பிடித்த அனிமேஷன் குறும்படம் ‘ஸ்வீட் கொகூன்’ (Sweet Cocoon).
மேட்டியோ பெர்னார்ட், மேத்தியூஸ் ப்ரூகெட், ஜோனாதன் டியூரெட், மேனன்
மார்கோ, க்வெண்டின் என 5 பேர் கொண்ட இயக்குநர் குழு இந்த படத்தை
உருவாக்கியுள்ளனர்.
ஆரம்பமே
கொஞ்சம் சதைபிடிப்பான ஒரு பட்டுப்புழு தனது கூட்டைத் தூக்கிக்கொண்டு
வருகிறது. சின்ன கூட்டில் தனது பருத்த உடலை பொருத்திக்கொள்ள போராட்டம்
நடத்தத்துவங்கும். அந்த வழியாக இரண்டு நல்ல மனம் படைத்த பூச்சிகள் இதைப்
பார்த்துவிட்டு உதவ முன்வருவார்கள். சிரமப்பட்டு நுழைத்து பார்க்க
முடியாமல் போய்விடும்.
பின்னர்
காமெடியான ஒரு திட்டத்த்தில் ஒருவழியாக புழுவை கூட்டுக்குள்
செலுத்திவிட்டு அதை ஒரு செடியுடன் இணைக்கும் முயற்சியிலும் உதவி
செய்வார்கள். ஒரு பக்கம் கல்லைக் கட்டிக் கொண்டு கணம் தாங்க தாங்களே அந்த
கல்லில் ஏறி கூட்டைவிட்டு பட்டாம்பூச்சி வெளியேறும் வரை தொங்கிக்
கொண்டிருக்கும் அந்த இரு பூச்சிகளும்.
ஒரு
கட்டத்தி மெல்ல கூட்டை உடைத்து பட்டாம்பூச்சி வெளீயேறி சிறகுகளை
விரிக்கும் போது இரண்டு பூச்சிகளும் வாய் நிறைய புன்னகைகளுடன் பார்த்துக்
கொண்டிருக்கும் வேளையில் லபக்கென ஒரு பறவை பட்டாம்பூச்சியை காலில்
கவ்விக்கொண்டு சென்றுவிடும்.
பழைய
படி அந்த இரு பூச்சிகளும் அவ்ந்த வழியிலேயே ஏதும் நடக்காதது போல் நடக்க
ஆரம்பித்து விடுகின்றன. உணவுச் சங்கிலியின் உண்மையை கொஞ்சம் காமெடி கலந்து ,
முடிவு கொஞ்சம் சோகம் தான் எனினும் இதுதான் இயற்கை என்பதை மிக எளிமையாக
வெறும் 6 நிமிடங்களில் வெளிப்படுத்தியிருப்பார்கள். இந்த படம் ஆஸ்கர்
நாமினேஷனில் இந்த வருடம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறும்படத்தைக் காண (1080p HD) :
கருத்துரையிடுக Facebook Disqus