இது பசு, எருது, பன்றி, காட்டு எருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும் சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது! இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்புசத்து. இந்த கொழுப்புசத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins(HDL)) சத்தை குறைத்து கெட்ட கொழுப்பு (Low-density lipoprotein (LDL))சத்தை இரு மடங்காக உயர்த்தி நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பல எதிர் வினைகளையும் உண்டாக்கும் கொழுப்பான இது இருதயநோய் (coronary heart disease, Cancer, Diabetes) மற்றும் உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு. Partial lyhydrogenatedoils என்பது இந்த கொழுப்பிலிருந்து தயாரிக்கபடும் எண்ணை. நாம் உபயோகிக்கும் ஃப்ரென்ச்ஃ ப்ரைஸ் பாக்கெட்டில் கிடைக்கும் உருளைக் கிழங்கு சிப்ஸ் வகைகள், பீட்ஸா, சாக்லெட் என துவங்கி பல வகையான துரித உணவு வகைகள் தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது. இத்தனை தீங்குள்ளது என்று தெரிந்தும் ஏன் இந்த கம்பெனிகள் உபயோகிக்கிறது இந்த Partially hydrogenated oils / Hydrogenated Trans Fat?
இந்த எண்ணைகள் பல முறை திரும்ப திரும்ப உபயோகித்தாலும் தயாரித்த உணவில் மணம் மாறாது!. 18 மாதம் வரை வேண்டுமானாலும் இதில் தயாரித்த கெட்டுப் போகாமல் வைத்துக் கொள்ள முடியும். சாதாரண எண்ணையில் தயாரித்தது 3 நாட்களுக்கு மேல் தாங்காது!! இந்த எண்ணையில் தயாரிக்கும் போது கிடைக்கும் சுவையும் ஒரு முக்கிய காரணமே!!
நீங்களே கூட நினைத்திருக்கலாம் நம்ம வீட்டுல செய்யற ஃப்ரென்ச் ஃப்ரைஸ், மெக்டொனால்ட், மேரி ப்ரௌன், பீஸா கார்னர்களில் கிடைக்கும் அளவுக்கு சுவை இல்லை என்று!!! இனி நீங்கள் வாங்கும் குக்கீஸ், சாக்லேட் சிப்ஸ் , ஃப்ரென்ச்ஃ ப்ரைஸ் என எதை வாங்குவதாக இருந்தாலும் அதில் இந்த எண்ணெயில் செய்யப் படவில்லை என்று இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்து விட்டு பொருட்களை வாங்குங்கள்!!!
கருத்துரையிடுக Facebook Disqus