காதலுக்கு கண் இல்லை என்பார்கள், கண்களே இல்லை என்றாலும் காதலுக்கு முடிவில்லை என்பதே ‘ப்ளைண்ட் டிவோஷன்’ குறும்படத்தின் கரு. ஜூப்லீ புராஜெக்ட் தயாரிப்பில், எட்வர்ட் யொவ்ங் லீ கதை மற்றும் இயக்கத்தில் மெய் மிலான்கன், ஜுன் சிங் கிம் நடிப்பில் இந்த வருடம் ஜனவரி 28ம் தேதி வெளியான குறும்படம். இதுவரை 2 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப் வாசிகளின் வரவேற்புகளைப் பெற்றுள்ளது.
வெறும் 9 நிமிடங்களே ஓடும் இந்த படம் காதல் மட்டுமல்லாமல் உண்மையான அன்பு குறைகளைக் கண்டுகொள்ளாது என்பதை மிக அழகாக காட்டுகிறது. கதை இதுதான், சிசிலியா தினமும் காலையில் எழுந்திருக்கும் போதே செல்லமாக பயமுறுத்தி தன் கணவனை எழுப்பி விடுகிறாள். ‘எனக்கு தினமும் இது ஒரு சந்தோஷம்’ என சிசிலியா தன் கணவன் மீது அதீத அன்பை வைத்திருக்கும் ஒவ்வொரு தருணமாக சொல்லிகொண்டே செல்ல படம் நகர்கிறது. ஒவ்வொரு விஷயங்களையும் லூயிக்காக பார்த்து பார்த்து செய்கிறாள் சிசில். முட்டையுடன் ஏதேனும் ஒன்று தான் சேர்க்க வேண்டும் என்பது கட்டுப்பாடு எனினும் அவருக்கு முட்டையுடன் எல்லாம் என இருக்கும் உணவு பிடிக்கும் என முட்டை , காளாண், வெங்காயம், குடை மிளகாய் , என அனைத்தையும் வைத்து சமைக்கும் உணவு தினமும் காலையில் மிக பக்குவமாக கணவருக்கு செய்வது சிசிலின் அடுத்த வேலை. அடுத்து அவருக்கான துணிகளை பளிச்சென துவைப்பது என லூயியை அன்பால் தாங்குகிறாள் சிசில்.
அதிர்ச்சியடைகிறாள். கணவனிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் சிசில் கஷ்டப்பட்டு தான் தினமும் செய்யும் வேலைகளை செய்கிறாள். ஒரு கட்டத்தில் மனமுடைந்து தனியாக அழும் மனைவியை பார்த்துவிடுகிறான் லூயி. அவளிடம் பேச முயல அவள் கோபமாக பேசிவிட்டு செல்கிறாள். எனினும் லூயி விடாமல் பேச முயற்சி செய்ய, உண்மையை சொல்லி அழுகிறாள் சிசில். அடுத்து என்ன நடந்தது , லூயி என்ன செய்தார் என்பதே மீதி கதை.
சிசிலியாவாக மெய் மிலான்கன், லூயியாக ஜுன் சிங் கிம் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் மெய் மிலான்கன் ‘நாம் நேசிக்கும் நபரிடமே நான் பார்வையை இழக்கப் போகிறேன் , உனக்கு பாரமாக இருக்கப் போகிறேன் என சொல்வது எவ்வளவு கொடுமை எனமனதுக்குள் நினைத்துகொண்டு தவிப்பதும். நான் இனி அவன் வாழ்க்கையின் பார்ட்னர் இல்லை நோயாளி என உள்ளுக்குள் சொல்லிகொண்டு,, மனமுடைந்து அழும் நிமிடங்களும் சரி நம் மனதை சற்றே ஆட்டிப்பார்க்கும் தருணங்கள்.
ஜின் சிங் கிம் எளிமையான நடிப்பால் மிகவும் கவர்கிறார். இக்காலத்தின் பல ஜோடிகளுக்கு இயக்குநர் எட்வர்டு கொடுத்திருக்கும் நல்ல பாடம் இந்த ’ப்ளைண்ட் டிவோஷன்’ குறும்படம். சின்ன சின்ன சண்டைகளுக்கெல்லாம் உடனே விவாகரத்து என நிற்கின்றனர். இந்த குறும்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அன்பில் 10 சதவீதம் இருந்தாலும் காதல் வாழ்வும், சரி கல்யாண வாழ்வும் சரி கண்டிப்பாக இனிக்கும்.
குறும்படத்தைக் காண:
கருத்துரையிடுக Facebook Disqus