ஆண்ட்ராய்டு இயங்குதளப் பதிப்புகளுக்கு லாலிபாப் (5.0 – 5.1), கிட்கேட் (4.4), ஜெல்லி பீன் (4.1 – 4.3), ஐஸ் க்ரீம் சான்ட்விச் (4.0) என்று இனிப்பு வகைகளாகப் பெயரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் லேட்டஸ்ட் வெர்சன் ஆண்ட்ராய்டு M (6.0)க்கு MARSHMALLOW என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த புதிய இயங்குதளத்திற்கு MANGO LASSI, MOON PIE, MILK SHAKE உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தன. இந்நிலையில் நேற்று ஆண்ட்ராய்டு பொறியியல் துறை துணைத் தலைவர் டேவ் பர்க் (DAVE BURKE) தனது டுவிட்டர் பக்கத்தில் மார்ஷ்மெல்லோ என்ற பெயரையும் புகைப்படத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த இயங்குதளத்தின் முதல் முன்னோட்ட பதிப்பு (DEVELOPER PREVIEW) மே மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன் மூன்றாவது முன்னோட்டப் பதிப்பும், செயலிகள் உருவாக்குவதற்குப் பயன்படுத்தும் SDK (SOFTWARE DEVELOPMENT KIT)ம் நேற்று வெளியிடப்பட்டன. SDK-வைப் பதிவிறக்கம் செய்து மார்ஷ்மெல்லோவில் செயல்படும் செயலிகளைத் (APPS) தயாரிக்க ஆரம்பிக்கலாம் என ஆப்ஸ் தயாரிப்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த செயலிகளை கூகுள் ப்ளேஸ்டோரில் பதிவேற்றம் செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இயங்குதளத்தின் முன்னோட்டப் பதிப்பை கூகுள் தயாரிப்பான NEXUS 5, 6, 9, NEXUS PLAYER ஆகிய ஸ்மார்ட் போன் சாதனங்களில் இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்ற நிறுவனத் தயாரிப்புகளில் மார்ஷ்மெல்லோ வருவதற்கு இன்னும் சில காலம் ஆகும் எனத் தெரிகிறது.
மார்ஷ்மெல்லோவின் சிறப்பம்சங்கள்:
* நமது மொபைலில் செயலிகள், மற்ற செயலிகளை ACCESS செய்வதை (APP PERMISSIONS) கண்ட்ரோல் செய்யும் வசதி. உதாரணமாக, நீங்கள் ஸ்கைப்பில் வாய்ஸ் கால்களை மட்டும் பயன்படுத்தும் போது, ஸ்கைப் செயலி உங்கள் கேமரா செயலியைப் பயன்படுத்த அனுமதி மறுக்குமாறு நீங்கள் செட்டிங்ஸ் அமைத்துக் கொள்ளலாம்.
* இன்று ஸ்மார்ட் போன் பயனாளிகளின் பெரிய தலைவலி பேட்டரி சார்ஜ் சீக்கிரம் குறைந்துவிடுவது. பேட்டரி சார்ஜ் நிலைக்க வைக்க DOZE MODE புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டோஸ் மோடில் செயல்படும்போது மோஷன் சென்சாரைக் கொண்டு மொபைல் உபயோகத்தில் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொண்டு பேக்கிரவுண்டில் இயங்கும் ஆப்களை நிறுத்திவிடும். ஆனால், அலாரம் மற்றும் நோட்டிபிகேஷன் ஆகியவை வழக்கம் போல் செயல்படும்.
* விஷுவல் வாய்ஸ் மெயில் வசதி.
* ஸ்டேடஸ் பாரில் உள்ள தேவையற்ற ஐகான்களை நமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் நீக்கி கொள்ளலாம்.
* பொதுவாக ஆப்ஸ் பயன்படுத்தும் போது மட்டுமே ஸ்கிரீன் ரோட்டேஷன் செயல்படும். இதில் ஹோம் ஸ்கிரீனும் ரோட்டேட் ஆகும்.
* ஒரே நேரத்தில் ஸ்கிரீனில் இரண்டு மூன்று ஆப்களைப் பயன்படுத்தும் MULTI-APP & SPLIT SCREEN SUPPORT.
* ஒவ்வொரு ஆப்பின் மேல் பகுதியிலும் கூகுள் க்ரோமின் CUSTOM TAB இணைக்கப்படும். எனவே, ஆப்பிலிருந்து வெளியே வராமலே இணையத்துக்குள் நுழைய முடியும்.
* தேவை இல்லாத இன் - பில்ட் ஆப்களையும் நீக்கிக்கொள்ள (UNINSTALL) உதவும் வசதி.
* கை ரேகை ஸ்கானர்களை மொபைலை அன்லாக் செய்வதற்கு மட்டுமன்றி, ஆன்லைன் ஷாப்பிங்கிலும் மற்ற ஆப்களிலும் கூடப் பயன்படுத்தும் வசதி.
* ANDROID PAY எனும் மொபைல் பேமென்ட் வசதி.
* ஆப்கள் இயங்குவதற்கு எவ்வளவு RAM செலவாகின்றது என்பதை அறிந்து கொண்டு, அவற்றை நிறுத்த உதவும் RAM MANAGER வசதி.
கருத்துரையிடுக Facebook Disqus