0
மெடிடேட் பீஸ்ஃபுல்லி
முன்பு ஓர் காலம் இருந்தது, அங்கு மனிதர்கள் மற்றவர்களுடன் முகத்தை பார்த்து நேரடியாக பேசி கொண்டனர், இன்று தொழில்நுட்ப வளர்ச்சி அனைவரையும் ஸ்மார்ட்போன் திரையை பார்த்து பேச வைத்திருக்கின்றது. தகவல்களை வேகமாக பறிமாறி கொள்ள முடியும் என்றாலும், ஸ்மார்ட்போன்கள் பொதுவாக அனைவரின் தூக்கத்தை பாதிப்பதில் துவங்கி பல இடங்களில் தொந்தரவாகவே இருக்கின்றது.

 எப்போதும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் நேரம் காலம் இல்லாமல் ஒலித்து கொண்டே இருக்கின்றது. உங்களுக்கு கால் செய்பவர் நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொண்டா அழைப்புகளை மேற்கொள்ள முடியும், இருந்தும் நீங்கள் அழைப்புகளை ஏற்காவிட்டால் நிச்சயம் தவறாக நினைப்பர். இந்த கவலையை போக்க புதிய செயலி ஒன்று வெளியாகி இருக்கின்றது.



நிம்மதியாக தியானம் செய்ய வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய செயலி தான் மெடிடேட் பீஸ்ஃபுல்லி (Meditate peacefully) . இந்த செயலி உங்களை முழுமையாக தியானம் செய்ய உதவியாக இருக்கும். உங்களது தியானம் முடியும் வரை ஸ்மார்ட்போனை ஒலிக்காமல் இந்த செயலி பார்த்து கொள்ளும் என்பதோடு ஆண்ட்ராய்டு பயனாளிகள் இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலி
மெடிடேஷன் செய்யும் நேரத்தினை செயலியில் குறிப்பிட்டு பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்தால் போதும், உங்களது ஸ்மார்ட்போன் உடனடியாக சைலன்ட் மோடில் வைக்கப்படும், மேலும் இந்நேரத்தில் யாரேனும் உங்களுக்கு அழப்புகளை மேற்கொண்டால், உங்களது ஸ்மார்ட்போன் சைலன்ட் மோடில் இருப்பதை குறுந்தகவல் மூலம் அழைப்பை மேற்கொண்டவருக்கு தெரிவிக்கும். குறுந்தகவலில் ஏதேனும் முக்கியமான விஷயம் என்றால் URGENT என குறிப்பிட்டு பதில் குறுந்தகவல் அனுப்ப வேண்டும் என்பதையும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மெடிடேட் பீஸ்ஃபுல்லி
பதில் குறுந்தகவல் வந்தவுடன் இந்த செயலி உங்களுக்கு எச்சரிக்கை செய்யும். இதோடு தியான நேரம் முடிந்தவுடன் மென்மையாக இந்த செயலி உங்களை எழுப்பவும் செய்யும். தினமும் தியானம் செய்ய இந்த செயலி காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் உங்களை நினைவூட்டவும் செய்யும் என்பதால் தவறாமல் தியானம் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு இந்த செயலியினை அக்மின்.காம் எனும் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு இருக்கின்றது.

கருத்துரையிடுக Disqus

 
Top