0
இன்று மக்கள் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிக்க தொழில்நுட்பத்தை தான் அதிகம் நம்பி இருக்கின்றனர் என்ற நிலையில் எல்லா தொழில்நுட்பங்களும் மக்களுக்கு நன்மையை மட்டும் விளைவிக்கின்றதா என்ற கேள்விக்கு இங்கு தெளிவான பதில் ஏதும் இல்லை என்றே கூற வேண்டும்.

இங்கு உங்களது வாழ்க்கையை மிகவும் எளிமையாக மாற்ற உதவும் பல்வேறு தொழில்நுட்பங்களின் அறிமுகத்தினை சுருக்கமாக பார்க்க இருக்கின்றோம்..

சிப்

சிப் வடிவில் இருக்கும் ஹெட்போன்கள் அதிகம் சிக்கி கொள்ளாத, எங்கும் எளிதில் பயன்படுத்த வழி செய்யும்.

பேனா

எந்த பொருளாக இருந்தாலும் அதில் இருக்கும் நிறத்தை ஸ்கேன் செய்து அதே நிறத்தில் எழுத வழி செய்யும் பேனா.


சோலார் சார்ஜர் 

கார், பேருந்து, ரயில் என எதில் பயணித்தாலும் கருவிகளை சூரியன் மூலம் சார்ஜ் செய்ய வழி வகுக்கும் சோலார் சார்ஜர்.

யுஎஸ்பி சாக்கெட்

யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ள பவர் சாக்கெட்கள், இந்த காலத்திற்கு தகுந்த பவர் சாக்கெட்.

மின் விளக்கு
 
 மின் விளக்கு கொண்ட பவர் சாக்கெட் - இதுவும் வித்தியாசமான பயனுள்ள ஒன்று தான்.
 
எக்ஸ்டென்ஷன்

 
சுவரில் பொருத்த கூடிய எக்ஸ்டென்ஸ்ரஷன் பாக்ஸ் - இதுவும் புதிய யோசனை தான்.

கவுன்ட் டவுன்

 

 நம்ம ஊரிலும் சிக்னல்களில் கவுன்ட் டவுன் சிக்னல் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்.
 
சத்தம்


சோனோ - சுவரில் இந்த கருவியை ஒட்டினால் போதும் வெளியில் இருந்து எவ்வித சத்தமும் அறையினுள் நுழையாது.

இயர் போன்

 

குழந்தைகள் அழும் சத்தத்தை கேட்டால் தானாக சத்தத்தை குறைக்கும் 'ஹியர்' இயர் போன்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top