0
மனிதனின் மனதை விட அதிக குப்பையால் நிரம்பி வழிகிறது பெருங்கடல்கள்..! கடல் மிகவும் அத்தியாவசமானது, கடல் தனக்குள் பல உயிரினங்களையும்,மர்மங்களையும் உள்ளடக்கி வைத்துள்ளது கூடவே நாம் போடும் குப்பைகளையும் தான். பலரை பொருத்த வரையில் கடல் ஒரு பெரிய குப்பை தொட்டி அவ்வளவு தான்.!

இதெல்லாம் மண்டைக்குள்ள போட்டு யோசிச்சு கடல்ல இருக்குற குப்பைகளை, 'இப்படி' சுத்தம் செய்தால் என்ன..!? என்று தன்னிச்சையாக கண்டுப்பிடித்து உள்ளான் - ஒரு20 வயது சிறுவன், தீயாக வேலை செய்யும் வயசாச்சே அது, அப்படிதான் இருக்கும்..!


20 வயது : இந்த 20 வயது சிறுவனின் பெயர் - போயன் ஸ்லாட்..

போயன் ஸ்லாட்டை - கடல் மிகவும் அசுத்தப்படுத்தப்படும் பிரச்சனையை தானாகவே கையில் எடுத்துக் கொண்ட - இளம் புரட்சிக்காரன் என்றே கூறலாம்..!

சிறந்தது : கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற கண்டுபிடிக்கப்பட்ட முறைகளிலேயே ஸ்லாட்டின் கண்டுபிடிப்பு தான் மிகவும் சிறந்ததாகும்..!
 
பலன்கள் : ஸ்லாட்டின் முறை பார்க்கதான் "அட இவ்ளோ தானா..?!" என்று தோன்றும். ஆனால் பெரிய பலன்களை பெறலாம்..!
 
மிதக்கும் தடை : நிறைய மிதக்கும் தடைகளை கடலின் நடுவே உருவாக்கி கடலின் மேல் படலத்தில் அவைகளை மிதக்க விட வேண்டும்..!
 
தடுக்கப்படும் : கடலின் அலையில் வரும் அனைத்து குப்பைகளும் இந்த மிதக்கும் தடைகளால் தடுக்கப்படும்..!
குப்பைகள் சேரும் : பின் 'வி' மாதிரி வடிவில் ஆன மிதக்கும் 'பஃப்பர்'களில் அந்த குப்பைகள் சேர்ந்து மொத்தமாக தடுக்கப்படும்..!
சேகரிப்பு: பின் அவைகள் சேகரிக்கப்படும்..!
நடைமுறை : இந்த திட்டம் 2016-ஆம் ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது..!
நீளம் : இந்த மிதக்கும் தடுப்பின் நீளம் 6500 அடிகள் ஆகும்..!

கருத்துரையிடுக Disqus

 
Top