0
peneliti-manusia-akan-mati-di-mars-dalam

செவ்வாய் கிரகம் - உலக விண்வெளி ஆராய்ச்சி துறை அத்துணைக்கும் மாபெரும் கனவாகும். பூமியை போன்றே வாழ்வாதாரங்கள் நிரம்பிய ஒரு கிரகமாக செவ்வாயை உருமாற்றம் செய்ய வேண்டும் என்பதே பல வான்வெளி ஆராய்ச்சியாளர்களின் விருப்பமாகும்.

அந்த விருப்பத்திற்கு தீனி போடும் வகையில் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரம் இருப்பதை கண்டுப்பிடித்து வெளியிட்டு இருந்தது நாசா, தற்போது அதே நாசா செவ்வாய் கிரகம் பற்றிய சமீபத்திய ஆய்வின் அதிர்ச்சியான முடிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

07-1446897566-1.jpg

டெர்ராஃபார்மிங் :

செவ்வாய் கிரகத்தை மனிதர்கள் வாழ தகுந்த ஒரு இடமாக மாற்ற வேண்டும் என்ற என்ணத்தையே டெர்ராஃபார்மிங் (Terraforming) என்பார்கள்.

152-700x437.jpg

கனவு :

அப்படியான டெர்ராஃபார்மிங் என்பது சில முக்கியமான வான்வெளி ஆராய்ச்சியாளர்களின் கனவாக மட்டுமின்றி பல அறிவியல்-கற்பனைக்கதை எழுத்தாளர்கள் கனவாகவும் கற்பனையாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
07-1446897569-3.jpg

இடைவெளி :

பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்க்கும் உள்ள இடைவெளியான 54.6 மில்லியன் கிலோமீட்டர்களை கடந்து செவ்வாயில் நீர் ஆதாரம் இருப்பதை கண்டுப்பிடித்ததின் மூலம் டெர்ராஃபார்மிங் மேல் நம்பிக்கை அதிகரித்தது.


render_01.jpg41d725ff-c273-45b9-81d1-14e
அதிர்ச்சி :

ஆனால், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலை பற்றி வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

earth-from-mars-artist.jpg

செவ்வாய் - பூமி :

நாசவின் ஆய்வின்படி செவ்வாய் கிரகமானது பூமி கிரகம் போன்றே சுற்று சூழலை கொண்டிருந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

07-1446897573-6.png

சூரிய காற்று :

ஆனால், கொடுமையான சூரிய காற்று மூலம் செவ்வாய் கிரகம் தனது நீர் ஆதாரம் மற்றும் சுற்றுப்புறசூழல் ஆகியவைகளை முற்றிலுமாக இழந்துள்ளது என்று அறிவித்துள்ளது நாசா.

07-1446897574-7.png

சூரிய காற்று :

செவ்வாய் கிரகத்தை சூரிய காற்று தாக்கும் போது எப்படி இருக்கும் என்ற கற்பனை சித்திரம்.

07-1446897575-8.jpg

சூரியப்புயல் :

செவ்வாய் கிரகத்தை சூரியப்புயல் தாக்கும் போது எப்படி இருக்கும் என்ற கற்பனை சித்திரம்.

07-1446897577-9.jpg

விளக்கம் :

பூமி கிரகத்திற்கு இருப்பது போன்று காந்தபுலம் (Magenetic Field) பாதுகாப்பு செவ்வாய் கிரகத்திற்கு இல்லாத காரணத்தால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் நாசா விளக்கம் அளித்துள்ளது.

07-1446897578-10.png

பூமி :

பூமி கிரகத்திற்கு இருக்கும் காந்த புலம் பாதுகாப்பு பற்றிய கற்பனை சித்திரம்.

07-1446897579-11.jpg

செவ்வாய் :

காந்த புலம் போன்ற பாதுகாப்பு எதுவுமின்றி சூரிய காற்றால், செவ்வாய் கிரகம் பாதிக்கப்படும் கற்பனை சித்திரம்.

07-1446897581-12.png

சூரிய துகள் காற்று :

செவ்வாய் கிரகத்தை வளிமண்டல இழப்பை ஏற்படுத்திய சூரிய துகள் காற்று பற்றிய கற்பனை சித்திரம்.

07-1446897582-13.jpg

சூடான மற்றும் ஈரமான சூழல் :

இந்த ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகமானது உருவான போது மிகவும் சூடான மற்றும் ஈரமான சூழல் கொண்டதாய் இருந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

07-1446897583-14.jpg

தலைமை விஞ்ஞானி :

அப்படியான ஒரு கிரகம் தான் கொடுமையான சூரிய காற்றால் தற்போது குளிர்ந்த மற்றும் காய்ந்த ஒரு பாலைவன கிரகமாய் காட்சியளிக்கிறது என்று கூறியுள்ளார், நாசாவின் தலைமை விஞ்ஞானிகளில் ஒருவரான மைக்கேல் மேயர்.

07-1446897585-15.jpg

மாவென் :

செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தை பற்றி நாசாவின் மாவென் (MAVEN - Mars Atmosphere and Volatile Evolution) விண்கலம் ஆய்வு மற்றும் பரிசோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ :

மேலும் நாசா, செவ்வாய் கிரகம் எப்படி சூரிய காற்றால் பாதிக்கப்பட்டது என்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top