0

stock-illustration-26854617-cute-smiley-

சூப்பர் செல்பீக்களை மிகவும் 'க்யூட்'டாக எடுப்பது எப்படி என்பதை உங்களுக்கு சொல்லி கொடுக்க தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் காத்திருக்கின்றனர் - செல்பீ மாஸ்டர்கள்..!

07-1446885985-1.jpg

கண்ணாடி முன்னாடி நின்னு செல்பீ எடுக்கும் போது பின்னாடி யாரும் இல்ல என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

07-1446885986-2.jpg


முன்பக்க கேமிராவை பயன்படுத்தும்போது ஃப்ளாஷ் ஆஃப் செய்ய மறக்க கூடாது. இல்லையென்றால், செல்பீயில் உங்கள் முகம் இப்படிதான் இருக்கும்.

07-1446885988-3.jpg

படுத்துக்கொண்டே செல்பீ எடுக்கும் போது, கழுத்தை இப்படி நேராக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் அமுல்பாய் போல் தெரியும்.

07-1446885990-4.jpg

யார் செல்பீ எடுக்க அழைத்தாலும் உடனே போஸ் கொடுத்து விடக்கூடாது. ஒருவேளை அவர்கள் கையில் இருப்பது 'பிஸ்க்ட்'டாக கூட இருக்கலாம்.

07-1446885991-5.jpg

 நாம் அணிந்து இருக்கும் உடையின் நிறமும், பின்னணியும் ஒரே நிறத்தால் இருந்தால் நல்லது.

07-1446885993-6.jpg

என்ன ரியாக்ஷன் தர போகிறோம் என்று முன்கூட்டியே முடிவு செய்து வைத்துக்கொள்வது நல்லது. இல்லையென்றால் குழப்பமான ரியாக்ஷன் தான் தர நேரிடும்.

07-1446885994-7.jpg
-
செல்பீயில் அப்பா பிள்ளை போல அல்லது அம்மா பிள்ளை போல காட்டிக்கொள்வது நல்லது.

07-1446885996-8.jpg

செல்லப் பிராணிகளுடன் செல்பீ எடுக்கும் போது நீங்களும் ஒரு செல்லப் பிராணியாகவே மாறிவிடுவது இன்னும் சிறப்பு.

07-1446885997-9.jpg

கண்ணாடி போட்டுக் கொண்டால் கண்களை மூடிக் கொள்ளலாம், செல்பீயில் தெரியாது என்று நினைக்க வேண்டாம்.

07-1446885999-10.jpg

செல்பீயில் மிகவும் நல்ல பையன் போல் தன்னை காட்டிக்கொள்ள நினைக்காதீர்கள். மீறி செய்தால் செல்பீ கிண்டல் செய்யும்படியாக தான் இருக்கும்.

07-1446886002-11.jpg

எல்லா செல்பீயிலும் கண்களை திறந்து வித விதமாக முழிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

07-1446886003-12.jpg

கோபமாக இருக்கும் போது செல்பீ எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

07-1446886005-13.jpg

செல்பீயில் காஸ்ட்யூம் முக்கியம் தான் ஆனால் அது முகத்தை மறைக்க கூடாது.

07-1446886007-14.jpg

மேட்சிங் மேட்சிங்காக உடை அணிந்து கொண்டு எடுக்கும் செல்பீயில் இன்னும் அனல் பறக்கும்.

07-1446886008-15.jpg

செல்பீ எடுக்கும் போது ஆர்வ கோளாறு அறவே கூடாது.

07-1446886010-16.jpg

பாத்ரூமில் மட்டும் தான் டக் ஃபேஸ் செல்பீ எடுக்க வேண்டும் என்று எந்த அவசியமில்லை

07-1446886011-17.jpg

என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில் செல்பீ எடுப்பது பெரிய பாவம். மேலும் அதை அப்லோட் செய்வது தேச குற்றத்திற்கு சமம்.

07-1446886013-18.jpg

எதிர்பார்த்தபடி செல்பீ வரும் வரை போராட வேண்டும். "நம்ம மூஞ்சிக்கு இதுவே போதும்" என்று சலித்துக்கொள்ளவே கூடாது.

07-1446886014-19.jpg

தூங்குவது போல் செல்பீ எடுப்பது தவறு ஒன்றுமில்லை ஆனால், அதை "ஸ்லீப்பிங் செல்பீ" என்று போட்டு மாட்டிக்கொண்டால் அது தவறு..!

07-1446886016-20.jpg

சாப்பிடும் போது டிவி பார்க்க கூடாது, பேச கூடாது, அதிகம் தண்ணீர் குடிக்க கூடாது கூடவே செல்பீயும் எடுக்க கூடாது.

07-1446886017-21.jpg

முதலில் நம்பிக்கை வேண்டும். "அட நம்ம மூஞ்சியா இது..!!!" என்று ரொம்ப வாயை பிளக்க கூடாது..!
 



torrborder.gif

E38408474_220.jpg
அடுத்த முற செல்பீ எடுக்கும் போது 
செல்பீ மாஸ்டர்கள் தந்த டிப்ஸ்ஸ
மறக்காதிங்க!
dT6e5RGT9.gif
torrborder.gif

கருத்துரையிடுக Disqus

 
Top