1
Screen-Shot-2014-07-30-at-10.33.41.png
எப்படியாவது ஒரு ஆப்பிள் மேக் வாங்கி விட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள் மிகவும் அதிகம். அதில் நீங்களும் ஒருவர் என்றால் உங்களிடம் நிச்சயம் ஒரு விண்டோஸ் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் உங்களுக்கு ஆப்பிள் மேக் மீது பேராசை வரும்..! 


அப்படியாக, ஏன் பிசி பயனாளிகளுக்கு ஆப்பிளின் மேக் மீது அதிகப்படியான ஆர்வம் வர என்ன காரணம், அதாவது மேக் மீது பிசி பயனாளிகளுக்கு 'வயிற்று எரிச்சல்' உண்டாக என்ன காரணம் என்பது பற்றியது தான் இந்த தொகுப்பு. 

Macbook-Air.jpg

09. ஒரே நிறுவனம் ஒரே பழுது : 

மைக்ரோ சாப்ட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே டெல் அல்லது எச்பி மேல பழி போடபடும், ஆனால் 'மேக்'கில் அந்த வேலையே கிடையாது. 

18-1450444235-09a.jpg

ஆப்பிள் மட்டும் தான் : 

'மேக்'கை தயாரிப்பது ஒரே ஒரு நிறுவனம் தான், அதுவும் ஆப்பிள் மட்டும் தான். ஆக, ட்ரபுல்ஷூட் என்று ஏதாவது வந்தால் அதற்கு ஆப்பிள் நிறுவனமே பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் கவனித்துக்கொள்ளும் (கொஞ்சம் அதிகம் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது).

5097321062_macbook-pro-retina-13-3-inch-

08. உயர்தரமான லாப்டாப் ஸ்க்ரீன்கள் : 

ஆப்பிள் மேக்கின் பிரத்யேக ரெட்டினா ஸ்க்ரீன் (Retina screen) மற்றும் டிபிஐ (DPI - Dots per inch) தொழில்நுட்பம் ஆகியவைகள் விண்டோஸின் பிசி-யை உயர்தரமான ஸ்க்ரீன் களில் பின் தள்ளி விடுகிறது.

windows.jpg

07. பயனுள்ள ப்ரீ லோட்டட் சாப்ட்வேர்கள் : 

பிசி பயனாளிகளைப் போல ஆப்பிள் மேக் பயனாளிகள் சாப்ட்வேர்களை 'தனியாக' வாங்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. சில கீ-ப்ரோகிராம்கள் (key programs) முன்பே இன்ஸ்டால் செய்யப் பட்டிருக்கும் என்பது நிச்சயம் மேக் பயனாளிகளுக்கு ஒரு போனஸ் தான். 

apple-magic-mouse.jpg

06. உபகரணங்கள் மற்றும் டிசைன் : 

ஆப்பிள் மேக் உடன் கிடைக்கும் உபகரணங்கள் நீடித்து உழைக்கும் என்பதிலும், மிகவும் நேர்த்தியான டிசைன்களை கொண்டவைகள் என்பதிலும் சந்தேகமேயில்லை. 

recycle_computer.png

05. உயர்ந்த வர்த்தக மதிப்பு : 

வாங்கி ஒரு வருடம் ஆன உடனேயேக்கூட பிசியின் வர்த்தக விலை சரிந்து விடும். ஆனால் ஆப்பிள் மேக்கின் வர்த்தக விலை அப்படி இல்லை. செக்ண்ட் ஹாண்ட் (Second Hand) மேக் கூட நல்ல விலை போகும். 

18-1450444228-04.png

04. யூசர் ப்ரெண்ட்லி : 

பிசி உடன் ஒப்பிடும் போது ஆப்பிள் மேக் மிகவும் எளிமையானது மற்றும் யூசர் ப்ரெண்ட்லி (User-Friendly) ஆகும். 

18-1450444227-03.png

03.வேகம் :

வேகமாக இயங்குதல் - ஒரு கம்ப்யூட்டரின் முக்கியமான வேலை இது தான். அப்படியாக, பிசி உடன் ஒப்பிடும் போது ஆப்பிளின் மேக் தான் மிகவும் சிறந்து விளங்குகிறது.

apple-mac-virus.png

02. பாதுகாப்பு : 

வைரஸ் மற்றும் ஹேக்கிங் போன்ற சிக்கல்களோடு ஒப்பிடும் போதும் பிசியை விட ஆப்பிள் மேக் தான் மிகவும் பாதுகாப்பானது.

18-1450444224-01.jpg

01. ரன் :

எல்லாவற்றிற்கும் மேலே உங்களால் ஆப்பிள் மேக்கில் எந்த விதமான தடையும் இன்றி பிசியை ரன் செய்ய முடியும்..! 

18-1450444240-bvm1e3o7.jpg

சமாச்சாரங்கள் :

ஒரு பொருளின் விலை அதிகமாக இருக்கிறது என்றால் ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம் இல்லையெனில், அந்த பொருளில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கிறது என்று அர்த்தம். இதில் ஆப்பிள் மேக் இரண்டாவது ரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக Disqus

 
Top