0
 
அதிர்ச்சி வேண்டாம், மின் விளக்கை கண்டுபிடித்வருக்கு பதில் அதன் பெருமைகள் அனைத்தும் எடிசனுக்கு வழங்கப்பட்டுள்ளது தான் உண்மை. இதே போல் வரலாற்றில் பல கண்டுபிடிப்புகளுக்கு யாரோ ஒருவர் தான் கொண்டாடப்படுகின்றனர். 

05-1449315949-01.jpg

டெலிஸ்கோப் 

இன்று டெலிஸ்கோப் கண்டறிந்தது கலிலியோ என நம்பி வருபவர்கள் உடனே அதனை மாற்றி கொள்ளுங்கள். டெலிஸ்கோப் கருவியை உண்மையில் கண்டுபிடித்தது ஹன்ஸ் லிப்பர்ஷி. இவர் தயாரித்த டெலிஸ்கோப் கருவியின் வடிவமைப்பை அப்பட்டமாக திருடப்பட்டதோடு அதற்கான காப்புரிமை திருடியவருக்கு வழங்கியது 1609 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த டட்சு அராங்கம் தான்.

05-1449315950-02.jpg

ஐபாட் 

கேன் க்ராமர் கண்டறிந்த ஐபாட் கருவி இன்று வரை ஆப்பிள் நிறுவனம் தயாரித்ததாகவே அறியப்படுகின்றது. ப்ரிட்டனை சேர்ந்த க்ராமர் 1979 ஆம் ஆண்டு டிஜிட்டல் மீடியா ப்ளேயரை கண்டறிந்தார், அப்போது அவரின் வயது 23 என்பதோடு இவர் 3.5 நிமிட பாடலை பதிவு செய்யும் சிப் ஒன்றையும் கண்டறிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

05-1449315952-03.jpg

ஆட்டோமொபைல்

கார்ல் பென்ஸ் கண்டறிந்த ஆட்டோமொபைல் தொழில்நுட்பமானது ஹென்ரி ஃபோர்டு கண்டறிந்ததாகவே இன்று வரை அறியப்படுகின்றது. ஹென்ரி ஃபோர்டின் குவாட்ரிசைக்கிள் கண்டறியப்பட்டதற்கு சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பே கார்ல் பென்ஸ், காசோலைன் மூலம் சக்தியூட்டப்பட்ட ஆட்டோமொபைல் வாகனமான மோட்டார்வேகனை கண்டறிந்தார். 

05-1449315953-04.jpg

விமானம்

ரைட் சகோதரர்கள் கண்டறிந்ததாக அறியப்படும் விமானத்தை உண்மையில் ரிச்சார்ட் பியர்ஸ் என்பவர் தான் கண்டறிந்தார். 1902 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 வயதான நியுசிலாந்து நாட்டை சேர்ந்த உழவரான ரிச்சார்ட் பியர்ஸ் சுமார் 32 மீட்டர் வரை தான் தயாரித்த பறக்கும் விமானத்தை இயக்கினார், இதை கண்களால் பார்த்தவர்களும் உண்டு. 

05-1449315954-05.jpg

மின் விளக்கு

1800களின் துவக்கத்தில் ஹம்ப்ரி டேவி என்பவர் இரு வயர், பேட்டரி மற்றும் சார்கோல் ஸ்ட்ரிப் கொண்டு வெளிச்சத்தை வழங்கும் கருவியை கண்டறிந்தார். இதே முறையை சற்று மேம்படுத்தி தாமஸ் எடிசன் 1877 ஆம் ஆண்டு மின் விளக்குகளை கண்டறிந்ததாக அறியப்படுகின்றது. உண்மையில் மின் விளக்கினை முதலில் கண்டரிந்த பெருமை ஹம்ப்ரி டேவியையே சேரும். 

05-1449315956-06.jpg

எக்ஸ்-ரே 

ஜெர்மனியை சேர்ந்த வில்ஹெம் ரோன்ட்ஜென் ஆராய்ச்சியாளர் தான் முதன் முதலில் எக்ஸ்-ரே தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். ஆனால் எடிசனின் ஃப்ளூரோஸ்கோப் கருவி மருத்துவ உலகில் பயன்படுத்தப்பட்டதால் புகழ் பெற்றது. உண்மையில் எடிசனின் கருவி முதலில் கண்டுபிடிக்கப்படவில்லை. 

05-1449315957-07.jpg

ரேடியோ

ரேடியோவை கண்டறிந்தது மார்கோனி கிடையாது, உண்மையில் நிகோலா டெஸ்லா எனும் பொறியாளர் தாண் ரேடியோ கருவியை கண்டறிந்தார். 

05-1449315958-08.jpg

இண்டர்நெட் 

அமெரிக்காவை சேர்ந்த வின்டன் செர்ஃப் இண்டர்நெட் உலகின் தந்தையாக அறியப்படுகின்றார். 1970களில் இவர் ARPANET எனும் சிஸ்டத்தை உருவாக்கினார். இன்று பயன்பாட்டில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் சிஸ்டம்களுக்கு அடிப்படையாக செர்ஃப் உருவாக்கிய சிஸ்சடகள் தான். எனினும் இன்று அல் கோரே தான இண்டர்நெட் தொழில்நுட்பத்தை கண்டறிந்ததாக அறியப்படுகின்றது. உண்மையில் இண்டர்நெட் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்திய பெருமை மட்டுமே கேரேவை சேரும்.

கருத்துரையிடுக Disqus

 
Top